கொலைகாரன்
அவன் சுமார் ஆயிரம் கொலைகளுக்குமேல் செய்தவன் ., இன்னமும் செய்வான் !
அவனுக்கு யாரைக்கண்டும் பயமில்லை . முரட்டு தோற்றமும் ,முறுக்கிய மீசை ,சவரம் செய்யாத தாடியுடனும் , தடியன் கைலி அணிந்து ,கையில் கத்தியும் ரத்தமுமாய் திரிவான் .அவனைசுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் . சிலர் கொலை செய்ய ,அவனை காசு கொடுத்து அழைத்துச்செல்வர்கள் !
அவன் கொலை செய்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன் !! கதறி அழுதாலும் , கண்ணிர் விட்டாலும் அவன் கல்மனம் மட்டும் கரையாது .கழுத்தை அறுத்து தலையை தனியாய் வைப்பதை பார்த்தால் ,இவனுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு தொடர்பு உண்டோ ??! .., என தோன்றும் . எந்த சட்டமும் அவனை தடுக்கவில்லை !! செய்த கொலைக்கு கூலி வாங்கிக்கொண்டு ,குடல் நிரம்ப சோற்றை குழைத்து அடிப்பான் ,மனிதனல்ல அவன் பேயேதான் !
இறக்கம் என்பதே அவனிடம் இருந்ததில்லை .காசு கொஞ்சம் கூட கிடைத்தால் , வெட்டிய கால்களைக்கூட பரிசளிப்பான் ..பனியன் போட்ட பிசாசு !! அவன் வரும்வரை அனைவரும் காத்துக்கிடப்பார்கள் ,கையில் காசுடன் !அவன் அரிவாள் தினமும் ரத்தத்திலேயே குளிப்பதலோ என்னவோ ?! அதன் நிறம் சிகப்பாய் மாறியிருந்தது !! காலை முடிந்து மதியம் வரும் வேலையில் ,தன் வேலையை துவங்க மனசாட்சி இல்லாதவன் ,கத்தியோடு கைகூப்பி வணக்கம் சொன்னான்.காத்திருந்தவர்களுக்கு அவன்மேல் பயமில்லை ..ஏன்னென்றால் அவன் இவர்களை வெட்டப்போவதில்லை. ஆயிரமாய் இருந்தாலும் , இரண்டாயிரமாய் இருந்தாலும் வரிசையாய் வரச்சொல்வான் ,தொழில் தர்மம் காப்பவன் ....
என்னதான் சொல்லுங்க ...எனக்கு அந்த கசாப்புகடைக்காரனை சுத்தமாய் பிடிக்காது ... "கொலைகாரன் ".