அன்பென்னும் மழை-12 -தேவி
(முன் கதை சுருக்கம் : குறிஞ்சி பூ கொடுத்து வர்ஷுவிடம் தன் காதலை சொன்னான் வருண்)
வெட்கத்தில் சிரித்தவள், முகம் அதே வெட்கத்தால் சிவந்து போனது. தென் முக சிவப்பை மறைக்க முயன்று கால் கட்டை விரலை பூமியில் அழுந்த ஊன்றி பார்த்தல். விரல் வழியே முக சிவப்பு வடிந்து விடுமா என்று.
அடடா என் தேவதை , எவ்வளவு அழகு. என்னை மணந்து கொள்ள சம்மதமா கண்ணம்மா?
பதிலேதும் சொல்லாமல் நிலத்தையே பார்த்தபடி நின்றால் வர்ஷு.
சொல்ல கண்ணம்மா, சம்மதமா? நீ பதில் சொல்லாமல் இருப்பதை பார்த்தல் என்னை பிடிக்கவில்லையோ?
அவசரமாக மறுத்தவள் , மௌனம் சம்மதம் என்று உங்களுக்கு தெரியாதா?
ஹைய்யோ, அப்படியானால் நீ என்ன சொன்னாய் , சம்மதமா..
அவளை அப்படியே தூக்கி ஒரு சுற்று சுற்றினான்.
இறக்கி விடுங்க , என்னை இறக்கி விடுங்கள்.
என்ன கண்ணம்மா , நீ ஒழுங்காய் சாப்பிடுவாயா ? இல்லையா? இப்படி வெய்ட்டே இல்லாமல் இருக்கிறாயே?
சரி என்னை கொஞ்சம் இறக்கி விடுங்கள். எல்லோரும் அங்கே காத்திருப்பாங்க. நாம போக வேண்டாமா?
வாங்க சார் , சீக்கிரம் போவோம்.
என்னது சாரா ? ஒழுங்காய் வருண் என்று கூப்பிட்டு விடு. இல்லையேல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.
என்னால் முடியாது?
அப்படின்னா நானும் வரமுடியாது.
சரி சார், சாரி , வருண் வாங்க போகலாம்.
அப்படி வா வழிக்கு என்றபடி அவளோடு பேசியபடியே பஸ்ஸை அடைந்தனர்.
இரவு ஒரு 8 மணிக்கு பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தனர்.
அதன் பின் வருண் வர்ஷிதாவை காரில் அவள் வீட்டில் விட சென்றான்.
அங்கே வாசலில் காத்திருந்த அம்மா , மகளை கண்டது வா வர்ஷு, வாங்க தம்பி என்று வரவேற்றாள்..
இருவருக்கும் குடிக்க காப்பி கொடுத்தாள்.
சூடாய் சுட்டு வைத்த இட்லி, கொத்தமல்லி சட்னி என்று பரிமாற்ற மூவருமே ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்ததும் வருண் செல் ஒலித்தது. எடுத்து பேசினான்.
மறுமுனையில், அவன் அம்மா, என்ன வருண் பொள்ளாச்சி வந்துட்டாயா? வீட்டுக்கு எப்பப்பா வருவே?
அம்மா நான் உமா அத்தை வீட்டில் வர்ஷுவை விட வந்தேன். கிளம்பிட்டேன் வந்துடறேன்மா?
வர்ஷு வீட்டில் தான் இருக்கியா? ரொம்ப நல்லதா போச்சு.
வரும் புதன் கிழமை நம்ம குல தெய்வம் கோயிலுக்கு போய் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுட்டு கல்யாணத்தை பேசி முடிச்சுக்கலாம்னு அப்பா சொல்றாருப்பா. உன்கிட்ட சொல்லிட்டு உமாகிட்ட சொல்லிடலாம்னு நினைச்சேன்.
சரி போனை உமாகிட்ட குடு நான் பேசிக்கறேன்.
அத்தை அம்மா உங்ககிட்ட பேசனும்கறாங்க.
போனை வாங்கி, சொல்லுங்க அண்ணி, இல்லை உமா அண்ணி வர்ற புதன் கிழமை நம்ம குல தெய்வம் கோயிலுக்கு போய் பொங்கல் வெச்சிட்டு, அங்கேயே பெரியவங்க முன்னால நம் வருண், வர்ஷு கல்யாணத்த பேசி முடிக்கலாம்னு சொல்றார். நீங்க என்ன சொல்றீங்க அண்ணி. இதுல உங்களுக்கு சம்மதமா?
நீங்க சொல்றதுல எனக்கு முழு சம்மதம் அண்ணி.
ஆமா உமா அண்ணி, வருண் நிச்சயம் முடிஞ்சதும் , 3 மாதம் ஜப்பான் வேலை விசமாய் போறான். வந்ததும் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு அவன் அப்பா ஆசைபடறார்.
இவங்க கல்யாணம் முடிஞ்சதும் அவரை கூட்டிகிட்டு ஊட்டி எஸ்டேட்டுக்கு போலன்னு இருக்கோம்.
நீங்க இங்க இருக்கீங்கல்ல. இங்க பாத்துக்குங்க.
சரி புதன்கிழமை கோயிலுக்கு போவோம். நாளைக்கு வர்ஷுவை கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க அண்ணி.
கொஞ்ச நேரம் பேசிட்டிருப்போம். நான் வச்சிடட்டா.
சரிங்க அண்ணி என்று வைத்தாள்.
வருண் கிளம்பிய பின் இரவு மகளிடம் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.
வர்ஷு உன்னை கேட்காமல் , உன் அத்தை வீட்டில் உன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டேன்.
உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லி விடும்மா ? நான் எப்படியாவது நிறுத்தி விடுகிறேன்.
எங்க மனசுல விட்ட சொந்தம் மறுபடியும் ஒன்னா சேரணும்னு ஒரு ஆசை . அதான் உன்னை கேக்காம சரின்னு சொல்லிட்டேன்.
உன் மனசுக்கு பிடிக்கலைன்னா சொல்லுடா என்றாள்.
இப்படி ஒரு தாய் யாருக்கு கிடைப்பாள். அந்த தாயை தவிக்க விட கூடாது என்று நினைத்தவள் ,
அம்மா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.
எனக்கும், வந்து.. வந்து ... அம்மா எனக்கும் வருணை பிடித்திருக்கும்மா என்று சொன்னதும்,
என் தங்கமே உனக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்று தவித்து போனேண்டா.
எனக்கு இப்போது தான் நிம்மதிடா.
சரிடா , நாளைக்கு உன் அத்தை வீட்டுக்கு நம்மை வர சொல்லி இருக்கிறார். ஒரு 10 மணிக்கு கிளம்பனும். நல்லா ரெஸ்ட் எடுடா.
குட் நைட் அம்மா என்றவளுக்குதான் தூக்கம் தூரமாகி போனது. தன் மனதுக்கு பிடித்தவனுடன் காலமெல்லாம் சேர்ந்து வாழபோகிறோம் என்ற சந்தோசத்திலும், கொடைக்கானலில் அவன் கொடுத்த முத்தத்தையும் நினைத்து கொண்டிருந்தவள் தூங்க வெகு நேரமாகி போனது.
(தொடரும்)