புரட்சி நெருப்பு------2
இருளை குடித்து வெளிச்சம் முளைக்க இதோ வந்துவிட்டேன் என்று கதிரவன் காலை வணக்கம் சொல்ல, பறவைகள் ஏதோ நடக்கப் போகிறது என்று உரைக்கும் வகையில் பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. வழக்கமான வேலைகளை முடித்து நடக்கவிருக்கும் நிகழ்வுகாக காத்திருந்தது சிவன் கோவில் கோபுரத்தில் அமர்ந்திருந்த புறாக்கள்.
வெயில் உச்சியில் ஏறும் முயர்சியில் இறங்கியது. ஒரு சில மக்கள் மட்டும் ஒன்று திரண்டு சிவன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து தோழர் கார்க்கி வருகைகாக காத்திருந்தனர்.
கார்க்கி, தன் இயக்க தோழர்களோடு வந்தார். மிகவும் குறைவான மக்கள் கூட்டத்தைப் பார்த்து மீதி மக்கள் எங்கே என்று கேட்ட போது, கூட்டத்தை பிளந்து கொண்டு வந்தது ஒரு குரல்.அது பின் வரிசையில் இருந்து வந்தது . அது ஒரு பள்ளிச் சிறுவனின் குரல் அவர்கள் எல்லாம் "இந்த போராட்டம் எந்த மாற்றமும் தராது எங்கள் நோரம் தான் வீணாகும் என்று புறக்கணித்து விட்டார்கள்" என்று கூறினான்.
புறக்கணித்த மக்களிடம் பேசத் தொடங்கினார் தோழர் கார்க்கி "உங்களுக்கு என்ன பிரச்சினை ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வரவில்லை, உங்கள் குறை தான் என்ன சொல்லுங்கள்" என்று கேட்டார். கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் "எங்களுக்கு இந்த போராட்டத்தில் நம்பிக்கையில்லை, எதுவும் நடக்காது நாங்கள் என்றுமே அவர்களுக்கு அடிமைகள் தான், நாங்கள் அப்படியே வாழ்த்து இறந்து போகிறோம், அவர்களுடன் மோதும் தெம்பு எங்களிடம் இல்லை, அவர்களின் அடிமைகளாக வாழ்ந்து இறக்கும் இழி பிறப்பு தான் எங்கள் பிறப்பு, இது தான் எங்கள் விதி இதை யாராலும் மாற்றமுடியாது" என்று கூறினார்
"இவங்க இப்படி தான் சொல்லுவார்கள் அண்ணா நம் இவர்களுக்கும் சேர்த்து நம் புரட்சி போராட்டத்தை இன்னும் வலுபடுத்துவோம் நேரம் கடந்து செல்கிறது வாருங்கள் அனைவரும் போராட்டத்தை தொடங்குவோம்" என்று அந்த பள்ளிச் சிறுவன் தோழர் கார்க்கியை பார்த்து அறைகூவினான்.
"இந்த பள்ளிச் சிறுவனுக்கு இருக்கின்ற உணர்ச்சி, வீரம் கூட உங்களுக்கு இல்லையா..??
நேத்தாஜியும், பகத் சிங்கும் போராட்டத்தால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்திருந்தால் நம் நாட்டில் விடுதலைப் புரட்சி நடந்து அறங்கேறிருக்குமா..??
பெரியாரும், பிரபாகரனும் பிறந்த மண்ணு இது
உங்களுக்கு வீரம் செத்துப் போச்சா..??
உங்கள் போராட்ட குணம் எங்கே..??
உங்கள் உரிமைகளை கூட கேட்ட நீங்கள் முன் வர மாட்டீர்களா..??
விதி அப்படி இருக்க நாம என்ன செய்ய முடியும்-னு சொல்ரீங்களே..
முதலில் விதி என்றால் என்ன தெரியுமா..??
நம்மை அடிமை படுத்தி ஆட்டிப் படைக்க ஆகாயத்திலிருந்து குதித்துவிடவில்லை.
நமது கடந்த காலத்தின் ஒன்று சேர்த்த சிந்தனைகளின் பிரதிபலிப்பே விதி என்றாகும். நல்ல சிந்தனைகளையும் எண்ணங்களையும் நிகழ்காலத்தில் நம் உள்ளத்தில் விதைப்போமானால் எதிர்காலம் என்ற விதி தானாகவே நம் கைவசம் வரும்.
'இனி ஒரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்' என்றார் புரட்சி பாரதி.
விதிகள் எல்லாம் விதைக்கப்படுவதேயன்றி, விதிக்கப்படுவது அல்ல.
நம் மதி கொண்டு இவ்விதியை வெல்வோம் வாருங்கள்,
உடையாத இரும்பாய்
போர்கள யானையாய்
கொதிக்கும் நெருப்பாய்
கோவில் நுழைவு போராட்டத்தை தொடங்குவோம் வாருங்கள்" என்று தோழர் கார்க்கி உணர்ச்சி மிகு உரையை நிறைவு செய்தார்.
போராட்டத்தை புறக்கணித்த மக்களெல்லாம் தோழர் கார்க்கியின் உரையையால் மனம் மாறி போரட்டத்தில் கலந்து கொள்ள விரும்பி தோழர் கார்க்கியை பின் தொடர்ந்தனர்.தோழர் கார்க்கி தன் இயக்க தோழர்களோடு ஆலோசித்தவாறு சிவன் கோவில் இருக்கும் வீதியில் நுழைந்தார். மக்களும் அவரை பின்தொடர்ந்தார்கள்.
இவர்கள் வருவதற்கு முன்னரே அங்கு மக்கள் கூட்டங்களால் கோவில் வாசல் நிறைந்து இருந்தது. அதை பார்த்தவாறு கார்க்கியும் அவரை பின்தொடரும் மக்கள் கூட்டமும் முன்னேறி செல்கின்றார்கள்.
என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் இயக்க தோழர்களுடன் புன்னகைத்தவாறு கோவல் வாசல் வந்து சேர்ந்தனர் தோழர் கார்க்கியும் உடனிருந்த மக்கள் கூட்டமும்.
-----தொடரும்-----