இளைஞனுக்கோர் நேரிசை-ரகு
எழுந்திரு கிழக்கே என்நாட்டு இளைஞரில்
விழுந்திரு கிழக்கே விழுங்கால் - அழுந்திடு
மத்தனைத் துயரிருளும் நீக்கியவன் வாழ்வில்
முத்திரை பதிப்பான் முனைந்து!
விழித்தெழு புயலே வாடும் இளைஞர்காள்
செழித்திடுப் புயலே துணிந்தோன் - வழிகளில்
உன்போலொரு வலிமைச்சமுத்திரங் காணுத
லென்பது கனவுகளாங் காலத்து!
எரிந்திடுத் தீயே இல்லாமை எனுமிடரை
எரித்திடுத்தீயே இளைஞர் கண்பட்டுத் - தெறித்திட
வளம்பெறும்; சமுதாய வளர்சியு மெழுச்சியும்
இளைஞ ரிடத்தேப் பெறின்!
துணிவார்த் துணிவர் துணிவிலார்த் தவிப்பர்
துணிவை ஏனைய இளைஞரே - அணிவர்
எத்திக்கும் புகழுற்ற நாடுகள் இளைஞரின்
சக்திக்கு உட்பட்டதே சிறப்பு!
எண்ணிலாக் கனவுகள் காண்கிறா ரவர்தம்
கண்ணிலொரு ஒளியுங் கொண்டார்-மண்ணிலோர்
மாபெருஞ் சாதனை நிகழ்ந்ததெனில் இளைஞரின்
மாபெரு மெழுச்சியேக் காண்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
