ஊடல் தந்த ஏக்கம்

தினம் காலை விழிக்கையில்
காதோரம் ஒரு முத்தம்!

கணினி கைகொண்டு 'கார்'எடுக்கச் செல்லுகையில்
கன்னத்தில் இன்முத்தம்!

கடமை முடிந்து களைப்படைந்து வீடுவர - வாவா உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று
கண்களால் கனிமுத்தம்!

காதல் வயப்பட்டு காரிகையின் கண்பார்க்க
கார்மேகம் பொழிவதுபோல் கட்டி முத்தம் கணக்கின்றி!

வெறும் கனவுதான்... ஆனாலும் இதமாக இருக்கிறது எண்ணிப்பார்க்க!

எழுதியவர் : ரமேஷ் somasundaram (2-Dec-14, 4:03 am)
பார்வை : 1594

மேலே