அம்மா சொன்னாலே
போறேன்னு சொன்னாலே, போறேன்னு
சொல்லாதே, போயிட்டு வரேன்னு சொல்லிக்கிட்டு
தாரேன்னு சொன்னாலே, கைய கையப் பார்த்திக்கிட்டு
இப்பயில்ல , அப்புறமா இருக்குமோன்னு நெனச்சுக்கிட்டு
பார்த்துப்போ என்றெல்லாம் சொன்னாலே,
பார்க்காமல் எப்படிம்மா? தடுக்கி விழுவேன்ல
நீர்த்துப் போகாமல் விலகிப்போ என்று சொன்னால்,
விலகாமல் எப்படிம்மா நடுவாலயா என்றுசொல்லி
நக்கலெல்லாம் வேணாண்டா நயமாகச் சொல்லுகிறேன்,
அப்படியே கேட்டுக்கடா, அப்பனைப்போல் இருக்காதேடா
திக்கெட்டும் இப்படித்தான் சொல்லுராங்க கொஞ்சம்
கேட்டுத்தான் பார்ப்போமே மெய்யாளுமான்னு,
சும்மா ஒன்னும் சொல்லலையே , வாழ்க்கையைத்தான்
வெவரிச்சு சொல்லுறாங்க அதை நான் உள்வாங்க,
எம்மாம் பெரிய சொல் பார்த்துப்போ விலகிப்போ அது
வழிக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் தான்.