தாயின் கதறல்

கொளுத்தி
போட்ட நெருப்பு
பத்திகுச்சு
ஊரெங்கும் ,

பத்த வச்ச
நெருப்பு
பறந்து போச்சு
ஊரவிட்டு,

அணைக்க தான்
ஆளில்லை,

வேடிக்கை பாத்து
மொத்த ஊரும்
கருகி போச்சு,

குடும்பமோ
சந்தி சிறுச்சு
போச்சு ,

வெக்கம் கெட்ட
நாக்கு
நாலு விதமா
பேசிபோச்சு,

ஒத்த புள்ள
பெத்து பொத்தி பொத்தி
நான் வளத்தேன் ,

கழுகு வந்து
கொத்தி
போச்சே .............

எழுதியவர் : ரிச்சர்ட் (2-Dec-14, 9:39 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : thaayin katharal
பார்வை : 86

மேலே