கலங்கிய டைரி

நானாக என்னை நேசித்தேன்
நானாக என்னை வெறுத்தேன் ,
இரவாக என்னை புசித்தாய்
பகலாக என்னை எரித்தாய் ,
தேனாக ருசித்த நாட்கள்
கசப்பாக ருசித்ததே,
சுடராக இருந்த ஜீவன்
மெழுகாக உருகுதே ,
வாழ்வான வாழ்கை அது
தடம் புரண்டு போனதே
நீ இல்லாத நொடிகளை
துச்சமாக வெறுத்து
நீ சென்ற இடம் நோக்கி
நானும் வருகிறேன் .......