ஒரு குளம் இரு இதயங்கள்

அன்று
தாமரைக் குளத்தருகில்
நாம் ஓடி விளையாடிய நாட்கள்
கிழிக்கப்பட்ட
தினசரி நாள் காட்டியின்
தேதிகளோடு சேர்ந்து
எங்கோ போய் விட்டன..
இன்று தாமரைக் குளம்
மீது நிற்கிறது
தாமரை நகர்..
நீயோ
மாற்றி
நட்டு வைக்கப் பட்ட
நாற்றாகி..
அறுவடைக்கு
தலை குனிந்து நிற்கும் கதிராக!
நானோ..
தூக்கி எறியப் பட்ட
கல்லாக..!