மன வரிகள்
மரணத்தில் கூட மௌனித்திருப்பேன்,
என் வார்த்தைகள்
உன்னைக் காயப்படுத்துமெனில்...!
மாறாக...
என் வார்த்தைகள் உன்னை சந்தோசப்படுத்துமெனில்,
உளறிக்கொண்டேயிருப்பேன்..
நான் ஊமையாக இருக்கும் போதிலும்...!
வார்த்தைகளில் இல்லையடி வாழ்க்கை...
நாம் வாழ்ந்து முடிக்கும் நாளொன்றில்,
அசைந்து எழ முடியா உடலும்,
பிறழ்ந்து பேச முடியா வாயும்,
செய்கைகளை கூட உணர்த்திட முடியாமல்
கிடக்கும் கை விரல் நுனிகளும் கூட,
சொல்லாதவற்றை இருவருக்குள்ளும் உணர்த்திடும்
அந்த ஒற்றைத் துளிக் கண்ணீர் சொல்லுமடி...
அதுவரையிலும்...
நீ எனக்களித்த பேரன்பையும்,
நான் உனக்களித்த பெரும் காதலையும்...!
வார்த்தைகளில் இல்லையடி நம் வாழ்க்கை..
நீ எனக்காகவும்,
நான் உனக்காகவும்,
வாழ்தலில் மட்டுமே அடங்கிக் கிடக்கிறது....!
என்றும் தீராத பிரியங்களுடன்... நான்..:-)