காதல் மட்டுமே வாழ்க்கையல்ல-வித்யா
காதல் மட்டுமே வாழ்க்கையல்ல.......!!-வித்யா
உதிர்ந்து விழும்
நட்சத்திரங்களென
என் நினைவுகள்
உன் உயிர் குடிக்க வேண்டாம்.........!!
உன் கண்ணீ ரோடைகளில்
காதல் மீன் தேடவேண்டாம்.......!!
என் பார்வைத் தீண்டல்கள்
உன் பிரத்யேகக் கனவுகளாக வேண்டாம்
உன் மதுக் கோப்பைகள்
என் முத்தங்களை ஈடு செய்ய வேண்டாம்
உன் சவரம் செய்யா தாடிக்கு
உன் காதலை உரமாக்க வேண்டாம்
எதிலும் பிடிப்பில்லா போக்கில்
உன் தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டாம்
உன் ஒருதலைக் காதலில்
வாழ்க்கையைத் தொலைக்கவேண்டாம்
ஏனெனில்........
காதல் மட்டுமே வாழ்க்கையல்ல....!!
நான் உனக்கான நிலையற்றவளாதலால்
என் காலத்தின் கோலத்தில்
ஊடுபுள்ளியாய் நீ தொலைந்து போகலாம்......!!

