தேர்வுக்காலம்-வித்யா

தேர்வுக்காலம்...!!-வித்யா


தேர்வுக்கு காத்திருந்த நாட்களோடு வேண்டா வெறுப்பாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என்னிதயம். புத்தகமும் கையுமாய் தனியறையில் எனை நான் திணித்துக் கொள்ளும் போது தனிமைக்குத் துணையாய் என் எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கின்றன. வரவேற்பறையில் ஒலிக்கும் ஒரு பாதிக் கதவு பாடல்.......கொஞ்சம் நிலை பிறழச் செய்தது. கொஞ்சம் அண்ணாந்து பார்த்த போது ஒரு சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட சிறு பூச்சி தவித்துக் கொண்டிருந்தது. அதனை நான் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்......நானும் மனிதன் தான் என்பது போல்...... பால்ய சிநேகிதம்.......சிறகுதிர்ந்த ஈசலாய் போன இடம் தெரியா உறவுகள்...... என ஏதேதோ எண்ணங்களின் தேசத்தில் உலாவிக்கொண்டே இருந்த போது.......எனை அறியாது உறங்கிவிட்டேன்..!!

முன்பொரு நாள்......உறக்கம் மறந்து பொன்னியின் செல்வன் படித்ததும்......... உறக்கம் வெறுத்து P .S .I LOVE YOU படித்ததையும் நினைத்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறேன்........!!

எழுதியவர் : வித்யா (4-Dec-14, 12:50 pm)
பார்வை : 107

சிறந்த கட்டுரைகள்

மேலே