சமூக மாற்றத்தில் மாணவர்கள்

சுற்றியுள்ள இடம் --என்று
சுத்தமாக மாறுமோ --அங்கு
மாணவர்களின் நிலை --சமூக
மாற்றாளியாக ....
ஆதி மனிதம் --பல
சாதி மனிதம் ஆனதே --என்று
சாதி மனிதம்
ஆதி மனிதம் ஆகுமோ --அங்கு
மாணவர்களின் நிலை --சமூக
மாற்றாளியாக ....
பெண் வாசம் குறைத்து
மண் வாசம் அனுபவித்து --என்று
பெண் பெருமை காப்போமோ --அங்கு
மாணவர்களின் நிலை --சமூக
மாற்றாளியாக ....
ஊரெல்லாம் கோவில் கட்டி
உலகெங்கும் சுற்றுதல் நிறுத்தி --என்று
நம் தாயின்
நலம் பேணுவோமோ --அங்கு
மாணவர்களின் நிலை --சமூக
மாற்றாளியாக ....
அலைபேசி வெறுத்து
அப்பா அம்மாவை மதித்து --என்று
அழகான குடும்பமாக
அன்பலையில் கலககிறோமோ--அங்கு
மாணவர்களின் நிலை --சமூக
மாற்றாளியாக ....
அமைச்சர்களும் அதிகாரிகளும்
ஆளுக்கொரு காரிலே
உல்லாசப் பயணம் மேற்கொள்வதை
உரிமையோடு நிறுத்தி --என்று
உலகின் உண்மைத் தலைவனாக
உருமாற்றம் பெறுகிறார்களோ --அங்கு
மாணவர்களின் நிலை --சமூக
மாற்றாளியாக ....

எழுதியவர் : ஜேம்ஸ் (4-Dec-14, 3:22 pm)
பார்வை : 379

மேலே