பிறந்த நாள்
விண்ணோடு முகில் கொண்ட
காதலில் விழுந்த விதை
விருட்சமாக வேரூன்றிய நாளோ இன்று ???
அன்னையின் அங்கத்தில் பயின்ற
ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும்
அரங்கேற்ற வந்த நாளோ இன்று ???
வையத்தின் அற்புத வாழ்வதனை
வயதுகளால் எண்ணி எண்ணி
எழில்பெற தொடங்கிய நாளோ இன்று ???
பளிங்கு பார்ரைகளின் நடுவே
பவளங்கள் மின்ன வைரமழைத்தூவி
இப்புவிக்கு உன்னை வரவேற்றநாளோ ???
எந்நாளோ இந்நாள்???
உம்மை சிறப்புறச் செய்யும் நாள்
இது தான் நீ பிறந்தநாளோ .............