சிறகுகள் முளைத்தக் கால்கள் -ரகு

வெற்றிடமில்லாமல்
நிரம்பியிருந்தது வறுமை

கொஞ்சம் ஆகாரம்
நெருடும் திருப்தி

மணித்துளிகள் கடப்பதென்பது
சகதிக்குள் சிக்கி மீளும்
சிறிய எறும்பின் முயற்சி

சிலுவை ஏந்திய
ஏழ்மை வாழ்வில்
எண்ணற்ற இன்னல்களின்
எச்சம்

வைகறையில் தொடங்கி
அந்தி வரையிலும்
இயற்கையில் அத்துணை மெய்

அதே காலநேர உழைப்பிலான
எனது வியர்வையில் மட்டும்
வருமானம் எனும் பொய்

எரிக்கும் சூரியனை
ஏந்திக்கொண்டு
எப்படி இப்படியொரு
அழகான இதமான நிழல்தர
முடிகிறதோத் தெரியவில்லை
இந்த மரத்திற்கு

நீள்சிந்தனையில்
நெருங்கிவிட்டிருந்தது
ஏழைகளை மட்டும்
எப்போதும் வஞ்சிக்காத உறக்கம்

இதுவரையில்
இரவுத் தூக்கமும்
அறிந்திடாத ஒருகனவு
நம்பிக்கை வார்த்து
அந்த நண்பகலில்

உற்சாகமிகுதியில்
உறக்கம் உதறி எழுகிறேன்
சூரியன் கீழ்நோக்கிச் சரியும்
அந்திவேளையில்

திசைகள் கிழித்துப் போகிறது
சிறகுகள் முளைத்த
என் கால்கள்!

எழுதியவர் : அ.ரகு (4-Dec-14, 8:33 pm)
பார்வை : 206

மேலே