கடுங்கதிரவன் நீ…

பாய்ந்து எழும் அலைகளாய்,
பதற வரும் துன்பங்கள்,
ஓய்ந்துவிடும் அடுத்த கணம்...
ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்...
காய்ந்து கிடக்கும் கதிரவனாய்,
கடுமை குணம் உனக்கும் உண்டு...
தேய்ந்து வரும் நீதிமுகம்
தெளிவுபடுத்த உன்னால் முடியும்…