காலம் கரைத்த மிச்சமாய் காதலுடன் - பூவிதழ்
முன்பெல்லாம்
குடைக்குள் மழை
இப்பொழுதெல்லாம்
குடையும்மில்லை
நனைய மனமும்மில்லை !
ஆங்காங்கே (மேக )கூட்டமாய்
கலைந்துசெல்ல ஆவலாய்
கனத்த மனத்துடன்
கறுத்த மேகங்கள் !
சிந்திய கண்ணீர்த்துளியில்
சிரிக்கும் புல்வெளி
மறக்க நினைத்த
நனைய மறந்த மழைகள்!
மின்னல் வெட்டும் நிமிடத்தில்
மீண்டும் வந்துபோகும் இருளாய் முகம் !
செவிப்பறை எட்டா இடிகள்
தினமும் இதயத்தில் தாங்கியாய்!
கனவு கலைத்த நிடைவுடன்
காலம் கரைத்த மிச்சம்
கல்லறையை நோக்கி
வெளிச்சத்தில் வெட்டவெளியில் !