கந்தர்வ தாகம்
![](https://eluthu.com/images/loading.gif)
கந்தர்வ தாகம்
=============
எதிலோ அதிருப்திக்கொள்ள
ஆரம்பித்தப்பின்புதான்
அவளை ஆராய ஆரம்பித்திருக்கிறேன்
காருண்யத்தின், அழகுத்துவத்தின்
பிரதிமையாக அவள்
அதைவிடவும் அழுத்தமான
க்ரூரம் என்னிடத்தில் உள்ளது என்பது
மண்ணில் மறையப்போகும்
இரகசியமாகும் என தெரிந்திருப்பாளா
என் எண்ணக்கப்பலின் ஆசைப்பாய்ச்சல்கள்
கடல் நீலத்தைக்கிழிக்கிறதா
ஆகாச நீலத்தைக் கிழிக்கிறதா ம்ம்ம்
மீண்டும் நான் மண் சேரலாம்
கடலாழியில் மூழ்கி முக்திப்பெறலாம்
வான் மிதக்கும் மேகத்துடன்
நீந்திக்கடக்கலாம்,,ம்ம்ம்ம்
எத்தனையோ சொற்களைக் கடந்த
நம் உரையாடல்களில்
இப்போதாவது எனக்குப் பிடித்த
அந்த ஒற்றைச் சொல்லை
கொண்டுவாயேன் பார்க்கலாம் ம்ம்ம்ம் ,,
தேவதைகளும் பேரழகிகளும்
ஸ்தம்பித்துப்போக,,,
காசுமாலையிட்டு உனை
சொந்தமாக்கிக்கொள்வேன் சம்மதிப்பாயா,,
நாசிகள் ஒன்றோடொன்று இழுக
மூக்குத்திக்கீறிய
காயங்கள் அறியாது
பாதி இராத்திரி துவங்கிட்ட ,
ஆடை விடுதலையின்
அரங்கேற்றம்
நீரரும்பி வற்றிய மிழிகள் இரண்டும்
சிறு மீன்களாக மாறி
இமைக்கரையோரம் சுவாசக்கரைதலின்
முதல் கட்டங்களோடு
அதன் சுதந்திரத்தை
என்னிடம் இழந்துகொண்டிருந்தது
நினைத்திருப்பாளோ பல சமயங்களில்
இந்த பலத்த ஆண்மையை
ஏன் சுமந்திருக்கவேண்டும் என்று
என் கூட இருப்பை
விரும்பாதவள் போலே
ஒதுங்கி ஒதுங்கி செல்கிறாள்
முழுமைகள் ஆர்ந்த புதுமைகளையும்
புத்திரவுகளையும்
தினந்தோறும் தரவிருந்தவள்
சீண்டிடும் தருக்கங்களுக் கடுத்து
வலியின் இரகசியம்
பூரணமாகக் கற்றுணர்ந்திருப்பாள்
காரியங்கள் தொட்டுமுட்டிய ஸ்திதியில்
இரு முகங்கள் கோணும்
அனுங்கலின்
கடைத் தருணங்களுக்குப் பின்னால்
வியர்வைப் பிசுகுகளே
மிகுந்திருக்குமென்
நெஞ்சாங் குழியினோடு
அவள் இதழ்களும்
கன்னங்களும் அப்பிக்கொள்ள
என் அணைப்புச் சிறைக்குள்ளான
அயற்சியிலும்
கள்ளப்பார்வை உயரச்சிரித்தவள்
தாடை உரசி
மீண்டும் அதே இடத்தில் ஒளியலானாள்
இரண்டு மூன்று முறைக்கு மேலாக ,,
அனுசரன்