புதுக்கவிதை

உனக்கென்ன வேண்டுமென்று என்னிடம் நீ கேட்டதற்கு
ஒன்றும் தேவையில்லை என
நான் தலை அசைத்து முடிப்பதற்குள்
என் ஆழ்மனதை படித்தது போல்
சட்டென்று
பெண்ணிற்கே அழகான வெட்கத்தை எல்லாம்
எனக்கு கொடுத்துவிட்டு
முத்தத்தால் நீ என்னை முழுவதுமாய் பற்றிக்கொண்ட
அந்த மாலை பொழுதில்
காதல் மட்டும் அல்ல காமமும்
புது கவிதை ஆனது!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Dec-14, 9:40 am)
Tanglish : puthukkavithai
பார்வை : 80

மேலே