அழகிய காதல்
மூன்றாண்டுகள் ஓடிவிட்டன
அதே சாலையோரம்
பணிமுடித்துவிட்டு நேரம் தவறாது
வீட்டிற்கு செல்லும் கும்பலில் ஒருத்தியாய்
நீயும் வழக்கம் போல்
என்னை கடந்து செல்ல !
மறுத்துவிட்டாலும் பரவாயில்லை தான்
எப்படியாவது சொல்லிவிடவேண்டுமென்ற எண்ணத்தில்
உன் பேர் சொல்லி அழைத்தவாரே
உன் முன்னே நான் வந்து நின்றேன்
என்னவென்று கேட்காமல்
படபடவென உனக்கு பிடித்த எல்லாவற்றையும்
பட்டியலிட்டுவிட்டு இவை அனைத்துமே எனக்கு பிடித்துப்போனது
உன் ஒருவனை மட்டுமே பிடித்த காரணத்தினால் தான்
என நீ சொன்னதும்
மூன்றாண்டுகளாய் நான் சேர்த்துவைத்த காதலை விட
மூன்றே நிமிடங்களில்
நீ சொல்லிய காதல் தான்
எனக்கு அழகாய் தெரிந்தது !