இளமையும் காதலும்

மே மாத மேகம் ஒன்று
அந்தி சாய்ந்த வேளையில்
என் திசை தேடி வந்தது
மனதோடும் வயதோடும் உறவாடி விட்டு
காதல் இசை பாடி
என் தனிமையை களவாடி சென்றது!
அந்த நினைவுகள் மீண்டும் தீண்டும் போதெல்லாம்
என் இரவெல்லாம் நீளுதே
என் இளமையெல்லாம் உனக்குள்ளே தொலைக்க தூண்டுதே .
தெரிந்தே விலகி போக துடிக்கிறேன்
நீயும் விலகி செல்வது போல் நடித்து
நித்தமும் என்னை உனக்குள்ளே புதைக்க செய்கிறாய்
என்னை மீட்க போராடியே
என் வாழ்வையெல்லாம் உனக்கென்ன தந்துவிட்டேன்.....
வென்றது நீயா இல்லை நாமா என்று மட்டும் சொல்லடி

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Dec-14, 9:38 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 57

மேலே