காதல்
தோழியின் திருமண நாளில்
காலம் கடந்து நாம் இருவரும் சந்தித்தோம் !
அங்கிருந்தவர்கள் உன்னிடம் திருமணத்திற்கான கேள்விகளை அடுக்கி வைக்க
நீயோ அவர்களுக்கெல்லாம் மௌனத்தை பதிலாக தந்தபடியே
புன்முறுவலோடு என்னை பார்த்த அந்த தருணத்தில்
உணர்ந்தேனடி இதுவரை நம் உறவில்
உதடுகள் சொல்லாத காதலை !!!!!!!!!!