காதலே காதலிப்பதற்காக பிறந்தவள் தான் நீ
பிறந்தநாள் ,திருமணநாள் இன்னும் எத்தனையோ
விசேஷமான நாட்களுக்கெல்லாம்
இனிப்பு கொடுப்போரை பார்த்திருக்கிறேன்!
அப்படித்தான் ஒரு நாள்
நீயும்
என் முன் வந்து நின்று
"இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
எனக்கு காதல் பிறந்திருக்கின்றது" என்றாய்
யோசித்து பார்த்தேன்
யாரோ காதலிப்பதற்காக பிறந்தவள் நீ அல்ல
காதலே காதலிப்பதற்காக பிறந்தவள் தான் நீ என்று
எனக்கு தோன்றியது!