அன்புடன் நான்

அன்புள்ள மாமா,
ஆசையுடன் அத்தை மகள் எழுதும் மடல்....
நான் என்ற நீ நலமே...
நீ என்ற நான் நலமா???

விழி பார்த்து விரல் கோர்த்து நடந்த
நாட்களின் நினைவால்
விழி நிறைந்து விரல் வழியே
வார்த்தை வழிகிறது
கடிதத்தில்.....

தவழும் வயதின் நினைவாய் நீ
தாவணி பருவ கனவாய் நீ
எங்கும் எதிலும் தெரிகிறாய் நீ...

விளையாட்டு நேரத்து இடைவேளை போல
சிறு காலம் பிரிந்திருக்க விதி சொன்னது
விளையாட்டும் முடிந்து
விதிகளும் தொலைந்து
வினாய் போன போன நாட்களிலும் வரவில்லை நீ....

யாருக்கும் புரியாது நம் காதல்...
எவருக்கும் தெரியாது நம் தேடல்.....
நீ மட்டுமே உறவானாய் எனக்கு.....
நான் என்றும் உயிராவேன் உனக்கு....

சீக்கிரம் வரும் சேதி சொல்...
உனக்காய் நான் காத்திருக்கிறேன்....

என்றென்றும் அன்புடன் நான்.....

எழுதியவர் : சந்தியா பிரியா (6-Dec-14, 4:33 pm)
Tanglish : anbudan naan
பார்வை : 97

மேலே