உனக்கா சொந்தம்

மண்ணிற்குள்
விழுந்த பின்னும்
நான்
விதைத்த விதைகள்
விருட்சமாகலாம்!

நீண்ட
கிளைகள்- பறவைகள்
தாங்கும் கூடமாகலாம்!

அசையும்
இலைகள்-வெம்மையை
தணிக்கும் கூரையாகலாம்!

சிரிக்கும்
மலர்கள்-தேனீக்கள்
திருடும் மகரந்தமாகலாம்!

பிறக்கும்
காய், கனிகள்-அனைவரும்
உண்ணும் உணவாகலாம்!

தாங்கும் விழுதுகள்-குருவிகள்
ஆடும் ஊஞ்சலகலாம்!

நீ-பிரியும் வரை
பேணிபராமரிதிருக்கலாம்!
ஆயிரம்
காரணம்-சொன்னாலும்
நீ விதைத்த விதை
உனக்கு சொந்தமாகுமா?
விதைத்த உன் முகவரி தான்
வேரில் பதிந்திருக்குமா!!!

எழுதியவர் : சு. ஈ. பிரசாத் (7-Dec-14, 7:16 am)
Tanglish : unakakaa sontham
பார்வை : 110

மேலே