aasai
பூக்கள் பூக்கும் சோலையில்,
வண்டாகி சுற்ற ஆசை!
தென்றல் பேசும் மொழிகளை,
மலரிடம் கேட்க ஆசை!
மேகம் போகும் பாதையில் ,
காற்றாகி செல்ல ஆசை!
வான்மழை பெய்யும் வேளையில் ,
வானம்பாடியாய் பறக்க ஆசை!
இரவில் விண்மீனை எண்ணிட,
நிலவுடன் உலவ ஆசை!
எங்கும் நிறைந்த இயற்கையில் ,
என்னை மறக்க. ஆசை!
எண்ணில்லா ஆசையை ஆசையாக,
கவிமாலையில் கூறிட பேராசையே!