இயற்கை நதியே

எங்கோ பிறப்பெடுத்து
என்னை கரைவிடுத்து
ஓடும் நதியினிலே
உள்ளம் தடக்கிறது

நதி கொப்பளித்து
போகும் அலைகளிலே
பல கொப்பளம் தோன்றிடுதே
அதில் மனம்
சொர்ப்பனங்கள் காண்கிறதே

மலை அடுக்கின்
முலைசுரந்து
படிப்படியாய் பல
அடி நடந்து
அலை அலையாய்
அலை நதியே

எத்தனை காலமாய்
நீ ஓடிய போதும்
உன் தேகம் வலிக்கவில்லை
உன் தேடல் முடிக்கவில்லை
ஒவ்வொரு தடையிலும்
உயிர் பெற எப்படி கற்றாய்

இன்னும் ஒரு முறை
பிறவி வருமெனில்
நதியிலே மீனாக வேண்டும்
ஊற்று முதல் சேற்று
கரை தொடும் வரை
நீந்தி வாழவேண்டும்

ஆழத்தில் புவிக்கோளத்தில்
கோலம் போடும் நதியே
நீ எங்கு வந்தாய்
இனி எங்கு செல்வாய்
என யாரு வைத்தார் விதியே

உன்னை போலவே
எங்கள் நிலைமையும்
நகர்கிறது கரை தேடி

எழுதியவர் : இணுவை லெனின் (8-Dec-14, 12:11 am)
பார்வை : 122

மேலே