புகைத்தல் வேண்டாம்

பொழுது போக்காய்
பொழுதுகளை கழிப்பதற்கு -பல
வெண்சுருட்டுகள் -
பொழுதுகளைக் கழிப்பது போல் -தமது
உயிரையும் அழிப்பதற்கு
வளியை போல் புகையை சுவாசிக்கிறார்கள்
தாவுற வயதில் தொடங்கி-இன்று
தள்ளாடும் வயதிலும் -இதை
விட முடியாமல் தவிக்கிறார்கள்
புகைத்தே உன் ஆயுளைக் குறைத்து கொல்லுவது போல
அருகில் இருப்பவரையும் இலவசமாக கொன்று விடுகிறாய்
ஒற்றை வெண்சுருட்டால் -உன்
உறுப்புக்களை ஒன்று சேர இழந்து விடாதே
நச்சுக்களின் மொத்த நாசகாரக் கலைவை இது
இதனால் நீயும் நஞ்சுறிப் போய்விடுவாய்
புற்று நோய்கள் விருந்தினராய்- உன்
இல்லத்தில் குடி புகுந்து விடும்
நீ விடும் புகையும் -உன்
ஒவ்வொரு செல்களுக்குள் சென்று உன் இறப்புக்கு வழிவகுக்கும்
மீண்டும் தீப் பற்றிக் கொள்ள எண்ணினால் -உன்னை
நீயே காப்பறிக் கொள்ள இயலாது
புகைக்கு அடிமையாகினால் -உன்னை
புகைதான் ஆட்கொள்ளும் கொல்லும்
புகைத்தலை தவிர்த்து மன
நிம்மதியோடு வாழுங்கள்
புகைத்தலை அடியோடு மறந்து விடுங்கள் அல்ல
புகை உங்களை அடியோட மறைத்து விடும்
(நான்தான் முகேஷ் போல )