காதல் முத்திரை

ஆங்கிலத்தில் சொன்னாய்
ஐ லவ் யு என்று
ஆழமாய் பதிந்தது
என் மனதில் அன்று.
நீ தான் என் காதலி என்று
காத்திருந்தேன் நானும்
உன் நினைவில் வாழ்ந்து கொண்டு
உன்னை கரம் பிடிக்க.
நீயும் கரம் பிடித்தாய்
உன் தாய் மாமன் என்று
என் மனதில் முத்திரையாய்
பதிந்த உன்னை என்ன செய்வேன் நான்.