நான் அனாதையா

விடியல் மட்டும் நன்றாய் விடியும்,
என் உள் இருள் எப்பொழுது மறையும்.

உறவுகள் இழந்து உயிரினில் கரைகிறேன்,
வலிகளை தாங்கி வழியினில் நடக்கிறேன்.


சுகம் ஒன்று காண நண்பர்கள்
மாது பின் செல்ல,
நானோ தாயென்பு எதுவென்று
சாலையில் அழுக!!

படிப்பென்ற பொழுதில் பணம்
எல்லாம் பெற்றோர்கள் தந்து
அவன் படிக்க,

படிப்பென்ற ஆசை நெஞ்சுக்குள் அடைந்து,தெருமுனைவோரம்
நான் இரும்பு தூக்க!

நித்தம் அழுது கண்ணீர் ரத்தமாச்சு,
நின்று பார்க்கும் பழக்கம்
இவ்வுலகில் மாறமபோச்சு

உறவுகள் இல்லாமல் பிறந்தது என்மேல் பிழையா,
இல்லை
உறவுகள் இல்லை என்றறிந்தும்
என்னை பெற்ற பெற்றோர்களின் பிழையா,
இல்லை
தூரமாய் நின்று பார்க்கும் இறைவனின் பிழையா,
இல்லை
தன் உறவுகள் ,தன் சொந்தங்கள்
என்று சொல்லி மற்றவரின் துயரத்தை நின்று ரசிக்கும்
மனிதர்களின் பிழையா!!!

ஆனால் நான் மட்டும் இங்கு பிழைக்கு பிழையாகத் தான் வாழ்கிறேன்!!

எழுதியவர் : இஜாஸ் (7-Dec-14, 4:30 pm)
Tanglish : naan anaathaiyaa
பார்வை : 68

மேலே