என்னதான் சொல்ல முயலுகிறாய்

என்னதான் சொல்ல முயலுகிறாய் ...

வலிதந்த விழிகளை நினைவுபடுத்துகிறாயா -என்
வழி முன்னே

வார்த்தைகள் இருந்தும் மெளனத்தினால்- எனை
கொலை செய்தாயே

என் கனவுகளை எல்லாம் உன் திசை திருப்பி -என்
வாழ்வை தொலைத்தாயே

என் புன் சிரிப்பையும் காதலித்த பாவத்திற்காக
கடனாக எடுத்துக் கொண்டாயே

விழிகளை கண்ணீர் வெள்ளத்தில் தனியே
நீந்தவிட்டாயே

இதயத்தை சொந்தமாக வாங்கிய பின்பு
தூக்கி எறிந்தாயே

உயிர் இருந்தும்- எனை
சடலமாக மாற்றினாயே

உன் பெயரே தினம் சொல்லும் -என்
உதடுகளை உதறிச் சென்றாயே

உன்னை மட்டுமே நினைத்த -என்
மனதை உன் நினைவில் இருந்தே எறிந்தாயே

நீ. ...நீ என்று நான் வந்த போது
நான் ...நான் என்று சொல்லி என்
காதலை காலடியில் மிதித்தாயே

இன்று ஏன் எனைத் தேடி
இறந்த என் காதலை கையில் தூக்கிக் கொண்டு
என் முன்னே அலைகிறாய் ...

மீண்டும் வலியால் நான் பட்ட காயங்களை
நீ நினைவு படுத்துகிறாய் .
என்றோ ஒரு நாள் என் மனம் மாறும்
மீண்டும் உனக்காக ...
நான் உன்னை மெய்யாகவே நேசித்தபடியால்
இனியாவது
உன் காதல் உண்மையாக இருந்தால் மட்டும்

எழுதியவர் : கீர்த்தனா (8-Dec-14, 9:41 am)
பார்வை : 195

மேலே