என் கவிக்கு செவிகொடு கண்மணியே-கோபிநாத்
எழுத்தில்
உணரமுடியா கவியை
இத்தனிமை உணர்த்தியது
உன் நினைவு குழியில்
நித்தம் விழுந்து
எழ முடியாத
அகதியாய் மாறிவிட்டேன்
ஆதிக்க காதலால்
அத்துமீறும் எண்ணங்களை
அகப்படாத போனாக்குள்
அடைக்க முயல்கிறேன்
எமாற்றம் மட்டுமே
என்னிடத்தில் மிஞ்சி
எரியும் நெறுப்பில்
எறும்பாய் கிடக்குறேன்
உதடுகள் வறண்டு
உலகமே சுழன்னு
உங்கையில்
உயிர் கசிந்து
உணர்வுகளின்றி கிடக்குறேன்
இத்தனிமை போக்கிடவே
இதயம் கிழித்து
இரத்த குளியலில்
இறக்கப் போகிறேன்
என் கவிக்கு செவிகொடு
கண்மணியே...