அடிமை வீரர்கள்

அடிமை வாழ்வு வாழும் இராணுவ சிப்பாய்கள்................

நாட்டுக்காக போராட வேண்டும்! நாட்டுக்கே என் உயிரையும் கொடுக்கவேண்டும் என்ற தியாக உணர்வுடன் தான் பல இளைஞர்கள் இராணுவம் மற்றும் அதைச் சார்ந்த படைப் பிரிவுகளில் வேலைக்குச் சேர்கின்றனர்! பல வருடங்களுக்கு முன்னால் வீட்டிலிருந்து காணாமல் போவோர் படிப்பில் மந்தமானோர் ஊருக்கும் வீட்டுக்கும் பாரமானோர் இப்படிப் பட்டவர்கள் தான் இம்மாதிரி பணிகளை தேர்ந்தெடுத்தனர். ஆனால் தற்கால சூழ்நிலையே வேறு நன்கு மெத்தப் படித்தவர்களும் புத்திசாலிகளும் நாட்டிற்காய் உண்மையாய் உழைக்க வேண்டுமென்ற உணர்வு உடையவர்களும் பட்டதாரி இளைஞர்களுமே இராணுவம் மற்றும் அதைச் சார்ந்த படை பிரிவுகளில் வேலைக்குச் சேர்கின்றனர்! பணியில் அமர்த்தப் படும் பொழுது நான் நாட்டுக்காக உண்மையாக இருப்பேன் எவ்வித இராணுவ ரகசியங்களையும் வெளியில் சொல்ல மாட்டேன் நாட்டுக்காய் என் உயிரையே அர்ப்பணிப்பேன் என்று சத்திய பிரமாணம் செய்து இவ்விளைஞர்கள் பணியில் சேர்கிறார்கள்.

ஆனால் இவ்விளைஞர்களை சரியான முறைகளில் பயன்படுத்துவோர் யார் என்று யாருக்கேனும் முழுமையாய் தெரியுமா? ரெக்குர்ட் பாய்ஸ் எனப்படும் பயிற்சி சிப்பாய்களையும் கான்ஸ்டபிள் போன்ற பதவிகளில் உள்ளவர்களையும் என்ன பாடு படுத்துகிறார்கள் என்று யாரேனும் யோசித்தது உண்டா? ஒரு உயர் அதிகாரியின் சொல்லுக்கு கட்டுப் பட வேண்டியது ஒரு சிப்பாயின் கடமை ஆனால் அவன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இந்த சிப்பாய் கட்டுப் பட வேண்டுமா?

ஒரு சிப்பாய் தன் பணிக்காலத்தில் குறிப்பிட்ட சில நாட்களேனும் ஒரு அதிகாரியின் வீட்டில் அடிமட்ட வேலைக்காரனாய் பணியில் அமர்த்தப் படுகிறான். நாட்டுக்கே உழைக்கவேண்டிய இராணுவ வீரன் ஒரு உயர் அதிகாரியின் மனைவியின் புடவை, சுடிதார் மற்றும் உள்ளாடைகள் வரை துவைக்க வேண்டியுள்ளது. அவன் வீட்டுப் பாத்திரங்களைக் கழுவித் துடைத்து அலமாரியில் அடுக்க வேண்டும், அவன் வீட்டை ஒரு நாளுக்கு இரண்டு முறை பெருக்கி துடைக்க வேண்டும், அவன் வீட்டு முற்றத்தையும் பெருக்க வேண்டும், அவன் வீட்டு தோட்டத்தில் செடி நட்டு நீர் ஊற்றி உரமிட்டு மருந்து தெளித்து பாதுகாக்க வேண்டும், வீட்டின் கழிவறைகளையும் சுத்தம் செய்யவேண்டும். ஐந்து ரூபாய் மல்லிக்கீரைக்காய் ஐந்து லிட்டர் பெட்ரோல் அரசாங்க செலவில் கணக்கிட்டு செலவிட்டு கடையில் சென்று வாங்கி வர வேண்டும், இதுமட்டுமல்ல இடையில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அதிகாரி மட்டுமல்ல அவன் மனைவி மக்கள் கொடுக்கும் அடிகளையும் இவன் தாங்க வேண்டும். வெளியில் சொன்னால் இவன் வேலை பறி போய்விடுமோ என்று அஞ்சி எவரும் வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர். நாட்டுக்காக தன் உயிரையும் கொடுக்கலாம் ஆனால் ஒரு அதிகாரியின் மனைவியின் புடவையும் ஒரு இராணுவ வீரன் துவைக்க வேண்டுமா என்ன?

அதிகாரியின் பிள்ளைகளுக்கு ட்யூஷனும் சொல்லிக் கொடுக்க வேண்டும். தன்னுடைய சொந்த வீட்டில் செல்லக் குழந்தைகளாய் வளர்க்கப் பட்டு நன்கு படித்து பட்டதாரியாகி உள்ளூரில் வேலை கிடைக்காத விரக்தியில் கூட பலர் இராணுவத்தில் இணைகின்றனர். அதிகாரிக்கு கீழ்படிய வேண்டியது வீரனின் கடமை அவன் மனைவிக்கும் கீழ்படிய வேண்டுமா? ஒருவீட்டிற்கு எதற்கு மூன்று நான்கு சிப்பாய்கள் பணியிலியாமர்த்தப் படுகிறார்கள்? சிப்பாய்கள் பணிசெய்தால் போதுமெனில் எதற்கு இவ்வதிகாரிகளுக்கு மனைவிகள்? இவர்களின் மனைவிகளுக்கு பணிவிடை செய்யத்தான் இந்திய அரசாங்கம் சம்பளம் கொடுத்து சிப்பாய்களை பணியிலமர்த்துகிறதா? இவ்வடிமைத்தன வாழ்விற்குத்தான் இவ்வீரர்கள் ராணுவத்தில் சேர்கிறார்களா? இதை இந்திய அரசாங்கமும் இராணுவம் சார்ந்த படைப் பிரிவுகளும் இந்திய இராணுவ அமைச்சகமும் கருத்தில் கொள்ளுமா? இதை முடிந்தால் பகிந்து (share) விடுங்களேன்

.................................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (8-Dec-14, 10:19 am)
சேர்த்தது : சஹானா தாஸ்
Tanglish : adimai veerargal
பார்வை : 173

சிறந்த கட்டுரைகள்

மேலே