வரம் அருள்

தீதெனச் சிறியோர்கள் -என்றும்
அறிகிலதாய் துணைப் பேணுவதாய்
வீணரையுடன் சேர்ப்பதுவாய் மனங்
கெடுப்பதுவாய் நலம் குறைப்பதுவாய்
நாணமும் பண்புமற்றே புத்தி
அழித்திடவாய் நன்று மறப்பதுவாய்
மாறிடும் மனம் அணைத்தாய் சிறு
அறிவுடனாய் ஆணவ இயல்புடைத்தாய்

பைந்தமிழ் தன்வசம் என்பார் - அந்த
புல்லரின் பொய்யுரை கண்டு அகல்வேன்
குற்றமில் குணம் நாடி நல்ல
பாதையில் பண்புமே சேர்ந்திடவே
செய்யருள் பரம்பொருள் -எனைத்
தங்கிடவே இருள் ஓடிடுமே
இன்றமிழ்த் தாயிவளே- புவி
யாவிலுமே என்றும் வாழ்ந்திடவே !

எழுதியவர் : கருணா (8-Dec-14, 10:46 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 209

மேலே