அரும்பு மலர்கள்

அரும்பு மலர்கள்

..."" அரும்பு மலர்கள் ""...

சிரிக்கும் குழந்தைகள்
சிங்கார தோட்டங்கள்
வினைகள் அறிந்திடாத
விளையாட்டு பருவங்கள்
அரைக்கால் சட்டையிலும்
அழகிய பாவாடையிலும்
அன்பென்கின்ற ஒன்றே
ஆழமாய் தெரிகின்றது,,,

தன் பாலினம் அறியாத
பாலியலும் கிடையாத
பாசத்தின் மொழி பேசும்
பச்சிளங் குழந்தைகள்
முத்தான பல்லைக்காட்டி
தித்திக்கும் புன்னகைகள்
புழுதியில் புரண்டு சண்டை
மறந்து மகிழ்ந்திடும் மழலை,,,

பக்கத்து வீட்டு பையனின்
பெயரிட்டு அழைத்தாலும்
அடுத்த வீட்டு பெண்ணை
கைபிடித்தே இழுத்தாலும்
காட்சிகளில் களங்கமில்லை
பார்ப்பவரும் தடுப்பதில்லை
பட்டாம் பூச்சிகளாய் நாங்கள்
கூடு கட்டி கூட்டாய் திரிவோம்,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (8-Dec-14, 1:53 pm)
Tanglish : arumboo malarkal
பார்வை : 71

மேலே