நீயாக வர வேண்டும்

நீ புன்னகைத்த போது
பூரித்தது என் உள்ளம்
நீ கண்ணடித்த போது
கனவுகள் நிறைந்தது இதயம்.

உன் கை ஜாடையில்
கவிழ்ந்தேன் உன்னிடம்
உன் கவிதைகளில்
இழந்தேன் என்னை.

உன்னை கரம் பிடிக்க
அழைத்த போது
தயங்குகிறாயே.ஏன்?..
கண்ணே..அடி பெண்ணே?.

பூரித்த உள்ளத்தினுள்
புகுந்து விடு. நீ.
கனவாய் இருந்த இதயத்தில்
நினைவாய் வந்து விடு.

நிழலாய் இருந்த நீ
நிஜமாய் வாழ்ந்து விடு
நிம்மதியாய் வாழ்ந்திடுவோம்
நீயாக வந்து விடு...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (8-Dec-14, 1:29 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 56

மேலே