நீ வேண்டும் எனக்கு

என் நித்திரையிலும் நீ தான்
என் நினைவிலும் நீ தான்
என் நிம்மதியிலும் நீ தான்
என் நிஜத்திலும் நீ தான்..
என் உள்ளத்திலும் நீ தான்
என் உடையிலும் நீ தான்
என் கரு விழியிலும் நீ தான்
என் படுக்கையறைலும் நீ தான்..
இப்படியெல்லாம் சொல்லி
உன்னை என் மனைவியாய்
மனை ஏற சொல்ல விருப்பம்
இல்லை எனக்கு..
என் உயிர் மூச்சு இருக்கும் வரை
என் இதயம் துடிக்கும் வரை
என் நிழல் படும் வரை
என் உடல் மண்ணறை காணும் வரை..
நீ வேண்டும் எனக்கு
மனைவியாய்
என் பிள்ளைகளுக்கு
அன்னையாய்..அணையா விளக்காய்..