அவனும் அவளும்
அவனும் அவளும் ..
"நாளைக்கு உங்கள் பிறந்த நாள். ஞாபகம் இருக்கா" .. அவள் கேட்டாள்.
"ஓ .. அப்படியா ? நட்சத்திரப் பிறந்தநாளா" .. அவன் கேட்டான்.
"இல்லை .. டேட் ஆஃப் பெர்த் டே" ..
"ஆமாம் .. இன்று ஜூலை 26த தியதி. நாளை ஜூலை 27"
"உங்களுக்குப் பிடித்தமாதிரி ஏதாவது செய்து தரலாம் என்று நினைக்கிறேன்"
"ஓ .. அப்படியா .. மிகவும் நன்று. என்ன செய்து தருவது என்று நினைத்துவிட்டாயா"
"இல்லை .. அதைத்தான் உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன்"
"பேஷ் .. பேஷ்" காலையில் வழக்கம் போல் காஃபி கிடைக்கும் அல்லவா"
"தாராளமாக" !.
"சிற்றுண்டி .. அதாவது ப்ரேக்ஃ பாஸ்ட்"
"அதுவும் உண்டு"
"உப்புமாவா ? அது வேண்டாம். நீ மசாலா தோசை செய்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. மசாலா தோசை செய்து தா" அரிசியும் உளுந்தும் ஊறப்போடு"
"உளுந்து கொஞ்சம் தான் இருக்கு .. அது தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. கிரைண்டர் வேறு ரிப்பைர்"..
"ஓ .. அப்படியா" ? பரவா இல்லை. அரிசியும் தேங்காயும் போட்டு மிக்சியில் அரைத்து தோசை சுட்டுக் கொடு"
"மிக்சியில் பிளேடு உடைந்துவிட்டது என்று சொல்லி எத்தனை நாள் ஆகிவிட்டது. அதை மாற்றித் தரவே இல்லையே"
"ஆமாம் .. மறந்தே போய்விட்டேன். மன்னித்து விடு. நாளைக்கே புதிய மிக்சி வாங்கி விடலாம். அதோடு அந்த பழைய கிரைண்டரை கொடுத்துவிட்டு, புதிதாக ஒன்று வாங்கி விடலாம். சரியா"
"ரொம்ப சரி. அப்போ உங்க ப்ரேக்ஃபாஸ்டுக்கு" ?
"நீயே சொல்லு"
"மாகி நூடுல்ஸ் ரெண்டு பாக்கெட் இருக்கு. அதோடு எக்ஸ்பயரி டேட்டு வேற முடியப்போறது"
"சரி .. சரி .. மாகி நூடுல்ஸ் போதும் .. மதியம் சாப்பாடு" ?
"சங்கீதா அவாளோடு அவுட்லெட் ஆத்துப்பக்கத்திலே புதுசா தொடங்கி இருக்காளாம் .. பேப்பர் ல பார்க்கல்லையா நீங்க" ?
"பார்த்தேன்னு தோணறது"
"நாளைக்கு உங்க பிறந்தநாள். நல்ல நாள்.. அங்கேயே போயி சாப்பிட்டுட்டு ஒரு சினிமா போகலாம். தியேட்டர்ல போய் சினிமா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு."
"ஆமாம்"
"சத்யம் தியேட்டர்ல இப்பவே டிக்கட் புக் பண்ணிடுங்கோ"
"நீ சொன்னா சரிதான் .. கண்ணே"
"அப்போ நாளைக்கு ராத்திரி டின்னர்" ?
"சினிமா பாத்த்டுட்டு வரும்போது ஏதாவது நல்ல ஹோட்டலுக்குப்போயி சாப்பிட்டால் போச்சு" என்றாள் அவள்.