எங்கேய�டா சென்றாய்

வன்மையான கைகளில்
மென்மையாகக் கன்னங்கள்
ஏந்தி ஏங்கி

என் கண்களில்
உன் பாதைத்தேடு.
பத்து விரல்களை பாந்தமாய் பின் கழுத்து செலுத்தி கோலமயிர் கோதி
புள்ளிகளற்ற பூக்கோலம் இடு.
என் இதழ் வரிகளில்
உன் இதழ் விரிகையில் தாமதியாது பதியன் இட்டு என் தோளில் முயங்கு.
வரிகள் கவனிக்க பட வேண்டியவை,காதலானாலும் கவர்ன்மெண்ட்ஆனாலும்.
இடைக்கோரத்து இடைவெளி அறு...ஓ
எங்கேயடா சென்றாய் ?
மதியும் மதிப்பும் கொண்ட சுதந்திர மானவளை சுகிக்க மறந்து....

எழுதியவர் : aharathi (10-Dec-14, 2:22 pm)
பார்வை : 97

மேலே