தர்மரே போய் வாருங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
மகாபாரதத்தின் தர்மர்
எவனுடைய சாபத்தினாலோ
பாரதத்திலேயே மீண்டும்
பிறந்து மாவட்ட ஆட்சியாளராகவும்
பணியில் அமர்ந்தபின்
ஆச்சரியம் அடைந்தார் ..
எங்கு பார்த்தாலும்
ஏராளமான
எண்ணிக்கையில்
துரியோதனன்கள் ..
சகாயம் செய்வதற்கு
கிருஷ்ணனும் இல்லாததால்
சங்கு ஊதிவிட்டு
வேலைக்கு முழுக்குப் போட்டார் !