காதல் மணம்

கொட்டும் அருவியின் குதூகலமாய் அவள்

கடலின் ஆழத்தின் அமைதியாய் அவன்

படபடவென வெடித்திடும் பட்டாசாய் அவள்

கம்பீரமாய் முழங்கும் இடியெனஅவன்

தித்திக்கும் நிலவின் குளிர்ச்சியாய் அவள்

தகதகக்கும் சூரியனின் தீட்சண்யமாய் அவன்

எதிர் துருவங்கள் தான் ஈர்க்குமோ!!!

"காதல் மணம் "வாசம் ப(பி)டிப்போமா!!!

கொண்டாட்டம் உற்சாகம் - அது ஒரு பிறந்த நாள் விழா குட்டி தேவதையாய் முதலாண்டில் அடி வைத்த குழந்தை நிலா..

பாரெங்கும் பரந்து விரிந்த தொழில் சாம்ராஜ்ய மன்னன் பறந்து வந்து விட்டான் - தோழியின் மகளுக்கு அவன் தாய் மாமன்.

மழைமேகம் மண்ணில் தவறி விழுந்ததோமயில்தோகையென படர்ந்து விரிந்ததோமுதல் பார்வையிலே கிறங்கி நின்றான்மங்கையரிடம் மயங்காதவன் - கருங் கூந்தலிலே மோகம் கொண்டான்

அறிமுகப் படலம்அங்கு ஓர் காதல் காவியம் அரங்கேற்றம்

என் உயிர் நண்பனே! என் பிரியமான தோழியிவள்.ஓர் விபத்திலிருந்து நிலாவின் உயிர் காத்தவள்இசையின் அரசி நாட்டியப் பேரொளிபண்பில் சிகரம் – இவள் பாரதி.. (நம் நாயகி)

இவன் சகல கலா வல்லவன்; வசீகர மன்மதன்இருபது வருட நட்பு; இருந்தும்புரியாத புதிரானவன்தொழில் நிர்வாகத்தில் சூரப்புலி - என்தோழன் மதன் யாருக்குமே எட்டாக் கனி...( நம் நாயகன்)

விழிகள் நான்கின் உரசல்இதயப் பாறைகளில் விரிசல்

முதல் முறை தோற்றுப் போனான்சிறையெடுத்து விட்ட வெற்றிப்புன்னகையுடன்முகம் சிவக்க தலை குனிந்தாள்எட்டாக்கனியைக் கைப்பற்றிய களிப்புடன்

செவ்வானம் பூத்தூவி வாழ்த்தியதுசெவ்வனே காதல் விருட்சத்தை வளர்த்து விட்டது

இறைவன் முன்மொழிந்ததை பெற்றோர் நிச்சயம் செய்தனர்இணைந்த மனங்களுக்கு மணநாள் குறித்து விட்டனர்

பின்னோடு அணைத்து கூந்தல் வாசம் பிடித்தான்பாவை அவனணைப்பில் தன் வசம் இழந்தாள்

என் கூந்தலில் முகம் புதைத்துஎன்ன ஆராய்ச்சி என் மனுவிற்கு..நக்கீரனும் ஈசனுமே தெளிவு பெறாத ஐயம்நீ கண்டு விட்டாயோ! ஏன் இந்த பரவசம்!

முந்தானை முடிச்சு என்று தான் கேள்விமுடி அழகாலே கட்டிப் போட்டு விட்டாயடி என் ரதிதேவி..காத்திரு கண்மணி காலம் அதிகமில்லைகல்யாண நாளன்று சொல்லுவேன் என் பதிலை..

மாலைக் கதிரவனே சீக்கிரம் மறைந்துவிடுமறுகோடியில் இருக்கும் அவனிடம் சென்றுவிடுமன்னவனுக்கு என் காலை வணக்கம் சொல்லிவிடுமங்கையென் கரம் பிடிக்க விரைந்து வர ஆணையிடு

இரவு முழுதும் என் துயர் கண்டு சிரித்தாய்இனி அங்கும் சென்று என்னவளை காய்வாய்அதனால் இப்போது நீ தேய்ந்து போய்விடுஅமுத நிலவே! மணநாள் இரவு வாழ்த்த வளர்ந்துவிடு

விஞ்ஞான வளர்ச்சியின் வசதிகள் இருந்தும்வான் நிலவை சூரியனை தூது செல்ல யாசித்தனர்இயற்கை வருடித் தரும் இனிய ஆறுதல்இவர்கள் பிரிவின் துன்பத்தையும் நேசித்தனர்.

அடைமழையும் புயலும் வெளியில்ஆட்டிப் படைக்கஅங்கு புறப்பட்டுவிட்டான் என்ற செய்தியைக் கேட்டஅவள் மனதிலோ இதமான தென்றல் வீசஆனந்தம் கொண்ட இயற்கையும் காதலுக்கு அடங்கி விட

ஊரெங்கும் புயலுக்குப் பின் வரும் அமைதிஉள்ளத்தில் இடியென தாக்கியதுஒரு செய்திமதன் வந்த விமானம் விபத்துக்குள்ளானது - அவளின்மனம் மட்டும் சிறிதும் அதிராமல் துடித்தது.

ஒவ்வொரு தகவலாய் வந்த வண்ணம்ஒருவரும் பிழைத்து வர இல்லை சாத்தியம்

என்ன பெண் நான் - என்னவனுக்கு ஆபத்துஎன் மனம் பதறவில்லையே!!ஏனென்று எனக்குத் தெரியவில்லையே!!

அறிவும் மனமும் எதிர் திசைகளில் பயணிக்கதன் நிலை விளங்காமல் துயர் கொண்டாள்இறைவன் திருவடியில் சரணடைந்தாள்

அவள் உயிரில் நிறைந்தவன் உருகி நேசித்தஅழகு கூந்தலை காணிக்கை ஆக்கினாள்ஆண்டவனிடம் அவன் உயிருக்கு மடி ஏந்தினாள்.

ஆலய மணி முழங்கிஅருள் வாக்கு தந்தது - மதன் நலம்ஆனந்தத்தில் திளைத்தாள்ஆக பொய்க்கவில்லை அவள் மனம்

வயதான சக பயணி மாரடைப்பில் சரிந்து விடவேற்று நாட்டில் நிறைய உதவிகள் தேவைப்படஇணைப்பு விமானம் தவற விட்டான்இக்கட்டில் செய்த நன்மைக்கு உயிரையே பரிசாகப் பெற்றான்

தகவல் கொடுத்தேனே மின்னஞ்சலில்தெரிவிக்கவே என் சூழ்நிலையும் தாமதமும்தொலைத் தொடர்ப்பு அற்றுப் போனது புயலில்தந்து விட்டது சிலநேர தவிப்பும் துயரமும்

மீண்டும் கலை கட்டிய திருமண சடங்குகள்மகிழ்ச்சியுடன் மங்கள ஒலி மேளங்கள்தன் ரதியைக் காண விரைந்து சென்றான்தன்னவள் செய்கை கண்டு திகைத்து நின்றான்

ஓடி வந்து அணைத்துக் கொள்வாளோ !ஓரப் பார்வையிலே காதல் சொல்வாளோ !காண விருப்பமில்லை என்று சேதி சொல்லி அனுப்பினாள்கல்யாணம் நிறுத்த வேண்டும் இது தன் முடிவு என்றாள்

விபத்து என்றதிலிருந்து அவள்செயல்கள் யாவும் வித்தியாசமாய்விடை தெரியாது தவிக்கிறோம் என பெற்றோர் வருத்தமாய்

அனுமதி தாருங்கள் ஒரே ஒரு முறை பார்க்க மட்டும்அதற்குப் பிறகு எதுவென்றாலும் எனக்குச் சம்மதம்

இன்றும்,செவ்வானப் பூந்தூறல் - அவள்சிவந்த கண்களில் நீர்க் கோடுகள்

சூறாவளியாய் நுழைந்தவன் சிலையானான்சினங்கொண்ட சிங்கம் தாய்ப் பறவையாகிப் போனான்

மலர்கள் உதிர்ந்து போகும் - என்மனதில் வேரென நிலைத்திருக்கும் நீஎன் அன்பை சந்தேகித்து மறுக்கலாமோ எனை பிரிந்து விட நினைக்கலாமோ

உன் நேசத்தை அறியாதவள் அல்ல - என் தவிப்பை உன்னிடம் என்னவென்று சொல்லஉள்ளத்தின் கலக்கங்கள்- கண்ணீர் வடிவம்உணர்த்தின அவள் அனுபவிக்கும்போராட்டம்

மணமேடையில் கெட்டி மேளம் - எல்லோர்மனம் நிறைத்(ந்)த திருமணக் கோலம்உறுதியாய் மறுத்தான் செயற்கைசிகை அலங்காரம்உன்னதமான இந்நிலை அவனுக்கான உயிர் வரம்

வெண்ணிலா முழுமதியாய் வாழ்த்தவான்முகில் மென் சாரலாய் பூத்தூவமண்வாசம் தாங்கி வந்த தென்றல்மல்லி முல்லைக்கு வழி விட்ட ஜன்னல்

கூந்தல் தான் இல்லையே இப்போது - என்கணவனுக்கு இன்னும் என்ன ஆராய்ச்சிகாதலுடன் கிண்கிணியாய் நகைத்தாள்கட்டியவன் மார்பினில் அடைக்கலம் புகுந்தாள்

பாண்டிய மன்னனுக்கு சந்தேகம்பெண் கூந்தலின் வாசம் இயற்கையா ! செயற்கையா !பிறந்தது சிவபெருமானுக்கும் கீரனுக்கும் தீரா விவாதம்

அறியவில்லை அவர்கள் - என் ரதியிடம்சிகையில்லாமலும் கமழும்"தெய்வீக காதல் மணம்"

{ இது என் முதல் கவிக்கதை மற்றும் ஒரு புதுமுயற்சி.உங்கள் விமர்சனங்களை கட்டாயம் பதிவு செய்யுங்கள்… சொற்சுவை பொருட்சுவைஎதில் குறையிருப்பினும் சுட்டிக் காட்டுங்கள் }்

எழுதியவர் : madhu (11-Dec-14, 10:35 am)
சேர்த்தது : sriram pkt
பார்வை : 1125

மேலே