நீலக்குயில் தேசம்11---ப்ரியா
வகுப்பிற்கு வந்த ஆசிரியர் கையில் புத்தகத்தை எடுத்துவிட்டு.........ஆமா இன்னிக்கு யார் வகுப்பு நடத்த போறீங்க என்று சொல்லி அனைத்து மாணவர்களின் முகத்தையும் நோட்டமிட்டார்..........அனைவரும் குனிந்துதான் இருந்தனர்........"ஹலோ 3rd bench 2nd one நீங்கதான்" என்று கைகாமிக்க நிமிர்ந்து பார்த்தாள் கயல்.........ஆம் நம்ம கயலேதான்டி ஐயோ என்ன நடக்கப்போகுதோ என்று தோழிகள் பிதுங்கிய கண்களுடன் அமர்ந்திருக்க கயல் எழுந்து அகல உருண்டையான பெரிய மைத்தீட்டிய கண்களை உருட்டிக்கொண்டு நின்றாள்............!
அவளது பார்வையிலேயே அந்த பரிதவிப்பை உணர்ந்தார் அவர் மனதிற்குள் சிரித்துக்கொண்டார் ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை இவளோ பயத்தின் உச்சத்துக்கு போய்விட்டாள் கால்கள் தடுமாறின அந்த கவர்ச்சியான கண்களின் பார்வையோ அமைதியாயின அவர் மனதிற்குள் சந்தோஷப்பட்டாலும் இப்பொழுது அவளது இந்த பார்வை சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது........
முன்னால வாங்க இப்போது நீங்க ஆசிரியர் நான் ஒரு மாணவன் அப்டீன்னு மனசுல நினச்சிட்டு தைரியமா வகுப்பு நடத்துங்க நோட்ஸ் வச்சி நடத்தினாலும் போதும் என்றார்.......ஆனால் அவள் கையிலோ எந்த நோட்சும் இல்லாததுதான் பெரிய வருத்தம் இருந்தும் நம்பிக்கையோடு முன்னே சென்றாள்.
அவர் மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் போய் அமர்ந்து கொண்டார்.
முன்னே சென்றவளுக்கு முதலில் மிகவும் பயமாக இருந்தது ஆனால் அதை அடக்கிக்கொண்டு முன்னால் இருப்பவர்கள் அனைவரையுமே அதாவது அந்த ஆசிரியர் உட்பட அனைவரும் தன் தோழர்/தோழிகள் என்று மனதில் உறுதியாய் நினைத்துக்கொண்டு......தன் தாத்தா அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைகள்........."நீ மேடையில் ஏறி பேசும் போது நீ ஒருவனே புத்திசாலி என்றும் அங்கிருந்து கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும் நினைத்து பேசு வார்த்தைகளும் கருத்துக்களும் மழைபோல் பொழிந்து கொண்டே இருக்கும்" என்று அவர் கூறிய வார்த்தைகள் மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் கயல்.
எங்கிருந்து வந்ததோ தைரியம் மிக மிக அற்புதமாய் ஆசிரியரையே மிஞ்சும் வண்ணம் வகுப்பை நடத்தினாள் கயல் எல்லாருக்குமே ஆச்சர்யம் இத்தனைக்கும் அவளது கையில் எந்த சிறு குறிப்புகளும் இல்லை அதுமட்டுமல்ல அந்த பாடத்திற்கேற்ப விளக்கங்களும் கருத்துக்களும் உதாரனங்களும் மிக தெள்ளத்தெளிவாய் 15நிமிடங்களில் எடுத்து முடித்தாள் ஆசிரியருக்கோ இன்னும் பெரிய அதிர்ச்சி எப்படி இப்படி நடத்தினாள் நம்மை விட அறிவாளியா இருக்காப்போல என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்..........!
தனக்கு தெரிந்ததை சொல்லி முடித்தவள் அப்படியே ஒரு கர்வம் கலந்த பார்வையை அவன் மீது வீசினாள்........அப்பப்பா என்ன ஒரு ஈர்ப்பு எப்படி இவ்வளவு அட்டகாசமாய் நடத்துனிங்க இவ்வளவு அழகா தைரியமா பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலஅதுவும் நோட்ஸ் கூட இல்லாமல் வாவ்..! சொல்ல வார்த்தையில்லை சபாஷ் என்று பாராட்டினார் அவர்.......
பக்கத்தில் அவள் வந்ததும் "ரொம்ப புடிச்சிருக்குங்க"அப்டீன்னு கயலிடம் மெதுவாய் சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர்.
உண்மையிலேயே அனைவர்க்கும் பிடித்திருந்தது தோழிகளால் நம்பவே முடியவில்லை நம்ம கயலா?இப்படி பண்ணினா?என்று அதிசயித்துபோயினர்.....!
அவளை உதாரணமாக சொல்லி புகழ்ந்து பேசினார் அவர் இந்த டாபிக் இனி நான் உங்களுக்கு நடத்தனும்னு இல்ல அவங்களே சூப்பரா தெளிவா அனைவருக்கும் புரியும் படி சொல்லித்தந்தாங்க நான் நோட்ஸ் மட்டும் தாரேன் நீங்களே படிச்சிக்கோங்க என்று சொன்னவர் அவளை மீண்டும் மீண்டும் புகழ்ந்தார்....உங்க பெயர் என்ன என்று கேட்டு தெரிந்துகொண்டார்.
ம்........கயல்விழி சரியான பெயர்தான் வைத்திருக்காங்க உண்மையிலேயே இவள் குவளைப்போன்ற கண்களை உடையவள் தான் என்ன ஒரு "பவர்புள் ஐயிஸ்" என்று விஜய் ஸ்டைலில் மனதிற்குள் சொல்லிப்பார்த்து மகிழ்ந்தான்.
எல்லாம் சரியாய் நடக்க ராகேஷ் வராததும் இந்த ஆசிரியரின் அந்த"ரொம்ப புடிச்சிருக்கு" என்ற சொன்ன வார்த்தையும் அந்த பார்வையும் இவள் மனதில் நெருடிக்கொண்டிருந்தது.......?
மாலையில் தோழிகள் மற்றும் திவ்யா உட்பட 4பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது திவ்யா முதலில் ராகேஷ் பற்றி பேச ஆரம்பித்தாள்.
ராகேஷிடம் என்ன பதில் சொன்னீங்க என்றாள்?
நான் எதுவும் சொல்லல.....என்றவள் அவன் எங்கே?உடம்புக்கு ஏதாவது முடிலயா?என்று ஒருவித தவிப்போடு விசாரித்தாள்.
அவளது கேள்வியின் அர்த்தம் மூன்று பேருக்கும் புரிந்தது.......கயல் உனக்கு ராகேஷை புடிச்சிருக்கா?என்று ஷீபா கேட்டாள்.
பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள் கயல்.
புடிச்சிருக்குன்னா புடிச்சிருக்குன்னு சொல்லுடி இப்படி அமைதியாய் இருக்காதே என்று அஜி எரிச்சலடைந்தாள்....?
எனக்கு ராகேஷ புடிச்சிருக்குடி ஆனா அந்த கனவில்.........?????என்று கனவைப்பற்றி இழுத்தாள் கயல்....?
கயலின் மனநிலையை புரிந்து கொண்ட தோழிகள்......என்னடி நீ இன்னும் பழைய காலத்து பொண்ணு மாதிரி மூடநம்பிக்கையோட இருக்கா அந்த கனவெல்லாம் சும்மா வாரது அதெல்லாமா நம்பிட்டிருப்பா லூசு என்று கயலின் மனநிலையை திசைதிருப்பினாள் ஷீபா.
என்ன கனவு....?என்று புரியாமல் கேட்டாள் திவ்யா....?
உனக்கு அத பற்றி தெரியாது அப்புறமா தெளிவா சொல்றோம் இப்போ இவளைப்பார்ப்போம் என்று கயலுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்தனர்........!
பழைய கதையை விடு.......இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாத கிடைக்கிறத வச்சி வாழ்க்கையை அனுபவிக்க கத்துக்கணும் என்று தோழிகள் புராணம் பாடினர்.
சரிடி வீட்டுல போய் யோசிக்கிறேன் என்று குழப்பமாய் எழுந்தாள் கயல்விழி......!
தன் தேடல் முடிந்ததா?இல்லை தொடருமா?கனவுக்காதலன் வருவானா?இல்லை ராகேஷ் தான் சாத்தியமா?என்று புரியாமல் மனத்தேடலோடு வீட்டிற்கு புறப்பட்டாள் கயல்.
கயலின் தாத்தா அந்த கொல்லிமலைப்பக்கம் இருக்கும் சாமியாரைக்காண சென்றார்...
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் தாத்தா சொல்ல அப்படியே நிதானமாய் கேட்டுக்கொண்டிருந்த சாமியார் நீண்ட நேர இடைவெளிக்கு பின் ஏதோ சொல்ல அதைக்கேட்டு கவலையாய் வீட்டிற்கு வந்தார் தாத்தா.....?
ராகேஷ் பழைய வீட்டில் குடியிருந்த அந்த ராஜலெட்சுமி குடும்பத்தை காணசென்ற அரவிந்த் அங்கிருந்து அவர்கள் இடமாறியிருப்பதை கேள்வி பட்டு அவர்கள் கொடுத்த அந்த புதுமுகவரியைத்தேடி பயணித்துக்கொண்டிருந்தான் ................?
தொடரும்....