அன்பென்னும் மழை-16-தேவி
(முன் கதை சுருக்கம் : கிராமத்து வீட்டில் தன் அறையில் நின்று நிலா வெளிச்சத்தில் தெரிந்த தோட்டத்தை ரசித்து கொண்டு நின்றாள் வர்ஷிதா)
எல்லோரும் அறைக்கு சென்றபின் தன் அறைக்கு செல்ல வந்தான் வருண். வர்ஷுவின் ரூமை அடுத்து வருணின் அறை. வர்ஷு என்ன செய்கிறாள் பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தவன் , கொஞ்சம் திறந்திருந்த கதவின் வழியே உள்ளே பார்த்தான்.
எப்போதுமே உறங்கும்முன் தலைக்கு குத்தியிருக்கும் கிளிப்பை கழற்றி விட்டு உறங்குவது வர்ஷுவின் வழக்கம்.
அன்றும் அப்படிதான் விரித்து விட்ட கூந்தல் காற்றில் ஆட , மெய் மறந்து ரசித்து கொண்டே நின்றாள்.
ஜன்னலோரம் சிலை ஒன்று நிற்கிறதோ என்று தடுமாறிப்போனவனின் கால்கள் அவன் அனுமதியின்றியே உள்ளே நுழைந்தது.
மெல்ல நடந்து சென்றவன் ஜன்னலில் பற்றியிருந்த கையை தன் கையால் அழுந்த பற்றினான்.
முதுகில் புரண்ட அவள் கூந்தலை மெல்ல ஒதுக்கி தன் இதழ் பதித்தான்.
திடுக்கிட்டு திரும்பியவள் , அவன் நினைவாகவே இருந்ததால் அவன் தொடுகை அவளுக்கு கூச்சம் தரவில்லை.
குழந்தை பேச்சு அவளை என்னவோ செய்ய கிறங்கி போனாள்.
ஏன் வர்ஷு உனக்கு என்ன குழந்தை பிடிக்கும்.
உங்களை போலவே ஒரு ஆண் குழந்தை. உங்களுக்கு?
உன்னை போலவே ஒரு பெண் பிள்ளை. பேச்சினூடே அவளை தன் பக்கம் திருப்பி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
மெல்ல குனிந்து அவள் இதழ் பக்கம் நெருங்க, அவள் மெல்ல கண்களை மூட , மெல்ல தன் பிடியை தளர்த்தி இன்று இது போதும் கண்ணம்மா. குட் நைட்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எல்லை மீறிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
நான் செல்கிறேன் கண்ணம்மா , என்று சிவந்து போன அவள் கன்னத்தை கிள்ளி மீண்டும் சிவக்க வைத்து போனான்.
காலையில் உறவுகள் ஒன்று கூடி, வயலுக்கு நடுவில் இருந்த அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு முடித்து பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
பூ கேட்டதில் அவர்கள் கேட்ட பூ வந்ததில் அனைவரும் மகிழ்ந்து போயினர்.
அங்கேயே திருமணம் உறுதி செய்து , பங்குனி 15இல் கோயிலில் வைத்து திருமணம் செய்வது என்றும், அடுத்த நாள் பொள்ளாச்சியில் பெரிய மண்டபத்தில் வரவேற்ப்பு வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
எதற்கும் ஒருமுறை நம் குடும்ப ஜோசியரை பார்திவிடலாம் என்று பிரியப்பட்டார் செல்வநாயகி.
அவரை பார்த்து இருவரது ஜாதகத்தையும் தந்து பொருத்தம் முதல் குடும்ப வாழ்க்கை பற்றி கேட்டதில் மனதிற்கு நிறைவாகவே அவர் சொன்னதில் அவர்களுக்கு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
அவர்கள் போன பின் அமைதியாக அமர்ந்திருந்த ஜோசியரை , அவர் மனைவி ஏன் இவ்வளவு நேரம் மௌனமாக உட்கார்ந்து இருக்கிங்களே என்ன ஆச்சு. உடம்பு சரியில்லையா? என்று கேட்க.
மனதுதான் சரியில்லை மீனாட்சி .
என்னங்க ஆச்சு ? என்றார் மீனாட்சி.
(தொடரும்)