வாங்கி வந்த வரம்
அழகிய குடும்பத்தில் 3 ஆண் பிள்ளைகளுக்கு பின்பு செல்ல மகளாய் பிறந்தாள் வைதேகி,ஊரெங்கும் கண்ணீரில் மிதக்கும் தருணத்தில் பிரசவத்திற்கு மருத்துவமனை போக முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே பிரசவம் நடந்தது. ரோஜா மலர் குவியலாய் கிடந்த மகளுக்கு தாயின் பால் வற்றி போன மார்பை பற்றி தெரியவில்லை, அக்கா மகள் பசி தீர்க்க மாமன் கிடைத்த வேலைகளை செய்து பால் பவுடர் வாங்கி வந்தார். சூழ்நிலை கொஞ்சம் மாறியது, பால் மணம் மாறக் குழந்தை பாட்டி மடியில் தவழ்ந்தது, அடுத்த படைப்பிற்கு தயாராகி விட்டனர் வைதேகியின் பெற்றோர். நினைவு தெரிய ஆரம்பித்த நாளில் இருந்து தாயின் அன்புக்கு ஏங்கியது பிஞ்சுமனம். வறுமையை காரணமாக்கி தன்னை பாட்டி வீட்டில் விட்ட பெற்றோரை வெறுக்க ஆரம்பித்தாள் வைதேகி. வைதேகிக்கு இரு தங்கைகளும் உண்டு. தன் மேல் யாருக்கும் அன்பு இல்லை என்ற எண்ணத்தில் சுயபச்சாதாபம் மேலிட உதட்டில் தேனை பூசி நயமாக பேசும் நயவஞ்சகர்களை கூட நம்பும் மன நிலையில் இருந்தாள் வைதேகி. நாட்டு நிலமை மோசமாக அந்நிய நாட்டில் அகதியாய் கால் பதித்தாள். பருவத்தின் கோளாறால் கயவனுடன் காதல் கொண்டாள், அவன் பசுத்தோல் போர்த்திய புலி என்று அபலை அவள் அறியவில்லை. சிறுவயது முதல் கிடைக்காத அன்பு அவன் உருவில் கிடைப்பதாய் எண்ணி அவனை உருகி உருகி காதலித்தாள். மனம் நிறைந்தவனே மணாளன் ஆக வேண்டும் என்று அடம் பிடித்து இரு வீட்டினர் சம்மதத்தடன் இல்லற வாழ்வில் கால் பதித்தாள். ஒரு வாரம் இனிமையாய் ஓடியது. தன் கணவனுடைய சுயரூபம் சிறிது சிறிதாய் தெரிய ஆரம்பித்ததும் இடிந்து போனாள். மதுவே பிடிக்காதென்றவன் பெரும் குடிகாரனாய் இருந்தான். குடிபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தான், கண்ணீருடனே வருடங்கள் சில சென்றன அவன் குணம் மட்டும் மாறவில்லை. கனவுகள் எல்லாம் கண்ணீரில் கரைய ஆறுதல் கூற யாரும் இல்லாமல் தனி மரமானாள். சிலநாட்களின் பின் தன்னை மறந்த குடி போதையில் இரும்பு கம்பி ஒன்றினால் வைதேகி தலையில் அவள் எதிர்பார்க்காத வேளையில் அடித்து விட்டு ஓடி விட்டான், ஆறென பாய்ந்தது இரத்தம் நேரமோ இரவு பத்து, தன்நிலை மறக்கும் முன்பே வைதேகி தன் தோழிக்கு செல்போன் மூலம் தகவல் சொன்னாள், விரைந்து வந்த தோழி இரத்த வெள்ளத்தில் இருக்கும் வைதேகியை கண்டு உறைந்து போனாள். தன்நிலைக்கு வந்தவள் மின்னலென செயல் பட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தாள். பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு வைதேகி உயிர் பிழைத்தாள். மீண்டும் அந்த கயவனுடனேயே தன் வாழ்வை தொடர்ந்தாள், என்றாவது ஒரு நாள் அவன் திருந்தி விட மாட்டானா...? என்ற நப்பாசையில்... மீண்டும் வைதேகியின் வாழ்வில் போராட்டம் தொடர்ந்தது, மனதிலும் தான் " இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு என் சொந்த மண்ணிலேயே என் உயிர் போய் இருக்கலாமே... " என்று
" இது உண்மை சம்பவம்"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
