கலைந்த கனவுகள்

அழகான அருமையான குடும்பம். முத்தாய் முன்று பிள்ளைகள். தலைமகன் ராமுவை தவிர அனைவருமே பெண்பிள்ளைகள். தந்தைக்கு பின் குடும்ப பாரம் தலையில் ஏற தங்கைகளுக்கு திருமணம் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். அன்னையுடன், தான் வளர்ந்த ஊர், அன்பான தங்கைகள், அதற்கும் மேலாக அவனது இதயத்துடிப்பாக இருக்கும் அவனது அத்தை மகள் அனைவரையும் பிரிந்து பணம் சம்பாதிக்க தூர தேசம் செல்கிறான். வாரத்திற்கு ஒரு முறை அன்னையிடம் இருந்து வரும் தொலைபேசி. வாரத்திற்கு இருமுறை அத்தைமகள் செல்வியிடம் இருந்து வரும் கடிதங்கள் மட்டுமே ஆறுதல் அளிக்க, கழிவறை சுத்தப்படுத்தும் பணியினை கூட சுகமான சுமையை செய்கிறான். தங்கைகளுக்கு மனம் முடித்து தனது தேவைகளுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவும் தாய்நாடு செல்ல மனம் துடிக்கிறது. அன்னை, உடன்பிறந்தவர்கள் மற்றும் தனக்காக வளர்ந்தவளை பார்க்கும் ஆவலும் மேலோங்க வீசா முடிந்து தாய்நாடு செல்லும் நாட்களை விரல் விட்டு எண்ணி கொண்டிருக்கிறான். விசா முடிந்து நாடு செல்லும் நாட்களும் வர தாயிடம் இந்த சந்தோஷ செய்தினை சொல்ல டெலிபோன் செய்தான் "அம்மா நான் ராமன் பேசுறேன்" என்று துவங்கும் போது " டேய் ராமா நம்ம செல்விக்கு கல்யாணம் முடிஞ்சுடிச்சி நீ வரும் போதும் அவ மாப்பிளைக்கும் சேத்து நல்ல பரிசு பொருள் வாங்கிட்டு வா... வந்ததும் ரெண்டு பேரும் போய் பாத்துடு வருவோம்..." இதயம் நொறுங்கும் சத்தம் கேட்டு சிலையென அமர்ந்தவன் அடுத்த நொடியே " சாரி ம்மா, விசா cancel ஆயிடுச்சின்னு சொல்ல தான் போன் பண்ணினேன் என்னக்கும் சேத்து வாழ்த்துக்கள் சொல்லிடுங்க மா" என்று கண்ணீர் மல்க phone - ஐ வைத்தான் ராமன்.

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (12-Dec-14, 11:05 am)
Tanglish : kalaintha kanavugal
பார்வை : 283

மேலே