மரணப்படுக்கையில்
யாரோ காசிக்காக அழுது
கண்ணீர் விடும் வார்த்தைகளை
கூறி என்னை நிஜமாக அழ வைத்து
காதல் செய்தவளே!
இன்று நான் உன்னிடம்
ஒன்றைக் கூற விரும்புகிறேன்
என்னைப்போல் உன்னை
பாசமாகவும், அன்பாகவும்
பார்த்துக்கொள்ள
இன் உலகத்தில் யாருமேயில்லையென
உரக்க சத்தமிட்டு அழுவாய்
நான் படும் இன்னல்களை
நீ அறிவாய்
என்னிடம் அதை சொல்லத்துடிப்பாய்
ஆனால் நான் கவலையின்றி
தூங்கிக்கொண்டிருப்பேன்
மரணப் படுக்கையில்.........