கவியளானின் கற்பனை உலகம் - 3 - சந்தோஷ்

கவியளானின் கற்பனை உலகம் - 3
------------------------------------------------------

கவியளானின் கவிவரியால் காதல்
குருவியவள் துயில்களைந்து விழித்திறந்து
செவியால் உயிர்காதல் ருசியறிந்திட்டாள்

--
அருகாமையில் மயிலவளின் மன்னவன்.
வெகுளியாளனவளின் இமை படப்படத்து
பேரழகனாம் கவியாளனை நோக்க
நோக்கிய பேரழகியை இவன் நோக்க...!

காதல் காதலாகி கசிந்துருகியது அங்கு.
காரிகையின் நெஞ்சமோ கோரியது
யாரிவன் ஏனிவன் இந்த வேளையிலென்று
வினாக்களாய் இவள்விழி எழுப்பியது.

யாரிவன் யாரிவன் இந்த மாறன்?
ஏனிவன் ஏனிவன் இங்கு வந்திட்டான் ?
கயவனோ?, மறவனோ ? , சங்கப்புலவனோ ?
இவந்தானோ என் அதிரூபனோ ?

விழிமுழித்து முழியுருட்டி அச்சமேறி
கிலிப்பிடித்த கிளியவளை ரசித்திட்டவன் - அவள்
கரம்பிடித்து காதல்வரம் கேட்டிட ரதியாளின்
மனம்படித்து காதல்கானம் பாடிட துடித்திட்டான்.
---
அந்தரன் இவனோ என்றெண்ணி, காதல்
இந்திரன் இவனிடம் மனம்பறிக்கொடுத்து , கவி
மந்திரன் இவனை மணம்புரிவாளா - விழி
சுந்தர குமுதச் செவ்வாய் பேரழகி ?



(தொடரும் )

-இரா.சந்தோஷ் குமார்

---------

*** அந்தரம் : மனம் கவர்ந்திடும் வகையில் அமுத சொற்களை பேசுபவன்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார் (11-Dec-14, 7:45 pm)
பார்வை : 200

மேலே