அம்மாவுக்கான என் முதல் பிறந்தநாள் வாழ்த்து
ஒரு அம்மாவுக்கான என் முதல் பிறந்தநாள் வாழ்த்து உங்களிடமிருந்து தொடக்கம், யார் வரம் பெற்றோம் என்னை சுமந்த நீயா? உன்னில் கிடந்த நானா? நான் தான் அம்மா உன்னில் ஜெனிக்க ஆயிரம் வரம் பெற்றேன், ஆசையாய் கோடி முத்தம், செல்லாமை ஒரு சில அடி, கன்னம் கில்லி என்னை கடவுள் என்பாய், விரல் பிடித்து விண்ணை ரசிப்பாய், நிலா பொழுதில் நீயும் குழந்தையாவாய், என் நித்திரைக்காக உறக்கம் தொலைப்பாய், மார்பு முட்ட மழையாவாய், இருதய கூட்டில் என்னை சேர்ப்பாய், எறும்பு கடிக்க இறந்து பிறப்பாய் இப்படி தெரிந்த வலிகள் பலவும், தெரியாத வலிகள் சிலவும் எனக்காய்!!!!!
அம்மா உன்னை நான் சுமக்க வேண்டும் ஒரு வரம்......!!!