இந்து புறா - முகமதிய கிளி
இந்து புறா - முகமதிய கிளி :
புறாவின் சிறகுகளில் கிளியின் கனவு மூட்டைகள்
புறா பறக்கிறது
மூட்டையின் முடிச்சு தானாக அவிழ்ந்து கனவு காகிதங்கள் காற்றில் மிதக்க
புறாவின் கண்கள் அதை பிடுங்கி படிக்கிறது
படித்த வேளையில் பறக்க மறக்கிறது
கிளியின் குரல் மெல்ல மெல்ல புறாவின் காதுகளில்
விம்மல் சத்தம் கிளியின் வீதி எங்கும்
அழுகை கடல் அதன் கண்கள் முழுக்க
புலம்பல் புலம்பல் புறாவை பார்க்கும் பொழுதுகளில் எல்லாம்
பாவம் கிளியின் தாய் தந்தை
உடல் நலிவுற்று உள்ளம் கெட்டு மன நிம்மதி மங்கி
மனதின் உட்சுவர் முழுக்க காயத்தின் தழும்புகள் ஆறாமல் தத்தளித்து கொண்டு
இந்த கிளி மட்டும் தனியாய் எத்தனை சுமை தாங்கும்
அப்போது எங்கிருந்தோ எதிர் பாராமல் வந்த புறா ஒன்று
ஏக்கம் வேண்டாம் கிளியே நான் இருக்கிறேன் உன்னோடு எப்போதும் என்றது
அந்த வார்த்தையின் வசிகரிப்பில் கிளி குழந்தையாய் மாறி குதுகலம்
கொண்டது
இன்று கிளியின் சுமைகளை தானும் சுமக்க தயாராய் புறா
புறாவும் கிளியும் புன்னகை சிந்தி கொண்டே உல்லாசமாய் உயிருக்கு உயிராய் ......!!!
எதிர்காலத்தில்
புறாவின் சிறகுகள் கத்தரிக்கபடலாம்
கிளியின் கூண்டு அடைக்கபடலாம்
எது எப்படியோ
சிறகுகள் வெட்டபட்டாலும்
கூண்டு அடைக்க பட்டாலும்
மனம் என்ற மாபெரும் கடல் என்றும்
ஓய்வுகொள்ள போவதில்லை
இவை இரண்டும் பறக்கத்தான் போகின்றன
வானம் முழுக்க வட்டமிடத்தான் போகின்றன
இது சத்தியம்
இது சத்தியம்
இது சத்தியம்....!!!!