யானைத்தடம்-ரகு

(குறிப்பு : காடுகளை ஆக்கிரமிச்சு மனிதன் குயிருப்புப் பகுதிகளை அமைச்சுகிட்டான்.அப்போ விலங்குகளாலத் தொல்லை வரத்தானே செய்யும்?).

வேட்டுவச்சு யானைகளை
விடியவிடிய தொரத்தறோம்
வட்டநிலா வந்துபோச்சு
வரலையே எங்கதூக்கம்

ஆட்டுமந்த கதறியதே
அஞ்சுமாடு சிதறியதே
ஓட்டப்பிருச்சு போட்ட யான
உயிர்நடுங்கப் பிளிரியதே

பரண்மேலப் பாதிப்பேர்
பாங்காட்டில் மீதிப்பேர்
பனிபொழியத் தாங்காம
பரிதவிக்கவிட்ட யான

வரமிருந்து வளர்த்தவாழ
வேரோடுப் புடுங்கித்தின்னும்
வந்தவழிப் போகலையே
வாட்டும் ராவு கழியலையே

எப்பம்மா யானபோகும்
எம்புள்ள கேட்டுமருகும்
இருட்டுக்குள் யானச்சத்தம்
இன்னுங்கேட்டுத் தொலைகெறதே

தப்பாதான் வாழத்துணிஞ்சோம்
தவிக்கவிடுங் காட்டுக்குள்ள
தந்தங்கிழிச்சுச் சாவதுக்குள்
தள்ளிபோவோம் யானத்தடம்!

எழுதியவர் : அ.ரகு (14-Dec-14, 2:56 pm)
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே